இந்திய கடற்படை ஏற்கனவே ப்ராஜெக்ட்-75 என்ற திட்டத்தின் கீழ் ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து 6 அதிநவீன ஸ்கார்பீன் ரக கப்பல்களை வாங்கியது.
இதனையடுத்து அடுத்த கட்டமாக மீண்டும் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை பெற இந்திய கடற்படை திட்டமிட்டு ப்ராஜெக்ட்-75ஐ என்ற பெயரில் டென்டர் விட்டது.
ஆக தற்போது இதற்கான போட்டியில் நான்கு நாடுகள் நான்கு வெவ்வேறு வகையான நீர்மூழ்கிகளை இந்திய கடற்படைக்கு தர ஆர்வம் காட்டி வருகின்றன.
ஃபிரான்ஸ் தனது SHORTFIN BARRACUDA ரக நீர்மூழ்கியை தர விரும்புகிறது, போட்டியில் இருப்பதிலேயே இது தான் அதிநவீனமான கலன் ஆகும் மேலும் இதில் Pumpjet Propulsion தொழில்நுட்பமும் உள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலமாக நீர்மூழ்கி கப்பலால் வேகமாகவும் அதே நேரத்தில் சத்தமின்றியும் பயணிக்க முடியும் சோனார் கருவிகளில் சிக்காது.
மற்ற நீர்மூழ்கிகளில் இந்த அதிநவீன தொழில்நுட்பம் இல்லை என்பதும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு இதனை விற்க முயன்று தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
அடுத்தபடியாக தென்கொரியாவின் DSME-3000 ரக நீர்மூழ்கி போட்டியில் உள்ளது, இந்த நீர்மூழ்கியின் சிறப்பம்சம் உலகில் தற்போது நீர்மூழ்கி கப்பல்களில் லித்தியம் ஐயான் பேட்டரிகளை பயன்படுத்தும் போட்டியில் தென்கொரியா முன்னனியில் உள்ளதாகும், இது காற்று இல்லாமல் நீர்மூழ்கிகள் இயங்க உதவி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தபடியாக ஸ்பெயின் நாடு தனது S-80 Plus ரக நீர்மூழ்கி கப்பல்களை விற்க விரும்புகிறது, இது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் கல்வாரி நீர்மூழ்கிகளை விடவும் பெரிது ஆனால் போட்டியில் இருக்கும் ஃபிரெஞ்சு தென்கொரிய கலன்கழை விடவும் சிறியதாகும் மேலும் நீர்மூழ்கி ஏற்றுமதிக்கு ஸ்பெயின் புதிய நாடாக உள்ளது.
கடைசியாக ரஷ்யா தனது அமூர் வகை நீர்மூழ்கிகளை தர விரும்புகிறது இது ரஷ்யா பயன்படுத்தி வரும் லாடா ரக நீர்மூழ்கிகளின் ஏற்றுமதி வடிவமாகும், இதனை விற்கு ரஷ்யா நீண்ட காலமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
அளவீடுகளின்படி முறையே SHORTFIN BARRACUDA, DSME-3000, S-80, AMUR ஆகியவை உள்ளன, இவற்றில் S80யை தவிர மற்ற மூன்றுமே ஏவுகணைகளை சுமக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.