
கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக தற்போது காஷ்மீரில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வெளிநாட்டு பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் லஷ்கர் இ தாய்பா மற்றும் ஜெய்ஷ இ மொஹம்மது பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தோர் ஆவர்.
ஆஃப்கானிஸ்தானில் ஹக்கானி குழுவினருடன் இணைந்து சண்டையிட்ட இவர்கள் வடக்கு காஷ்மீர் பகுதியில் ஊடுருவி வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை முதல் இதுவரை பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் ஆஃப்கன் எல்லையோர பழங்குடியினரை சேர்ந்த 50 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர்.
2018ஆம் ஆண்டு 143, 2019ஆம் ஆண்டு 138, 2020ஆம் ஆண்டில் வெறுமனே 23ஆக இருந்த வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 50ஆக அதிகரித்து உள்ளது.
இதற்கு ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சியை கைபற்றியது முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.