பாதுகாப்பு படைகளுடன் நக்சல்கள் கடும் மோதல்

  • Tamil Defense
  • October 26, 2021
  • Comments Off on பாதுகாப்பு படைகளுடன் நக்சல்கள் கடும் மோதல்

தெலுங்கானா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள வெங்கடபூர் பகுதியில் பாதுகாப்பு படைகள் மற்றும் நக்சல்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் தான் இந்த வெங்கடபூர் உள்ளது இங்கு முலுகு மாவட்ட காவல்துறையினர் மற்றும் க்ரேஹவுண்ட் கமாண்டோ படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் மூன்று நக்சல்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 1 SLR, 1 AK47 துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் கைபற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படையினருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெலுங்கான காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.