இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அக்டோபர் 10 முதல் 13 வரையிலான காலகட்டத்தில் மூன்று நாடுகளுக்கு சுற்றுபயணமாக செல்ல உள்ளார்.
கிர்கிஸ்தான் கஜகஸ்தான் மற்றும் அர்மீனியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் அவர் அந்நாட்டு தலைவர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்து பேச உள்ளார்.
இந்த சுற்றுபயணத்தின் போது இருதரப்பு உறவுகள் மட்டுமின்றி ஆஃப்கானிஸ்தான் பற்றியும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.