
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தனாக் மாவட்டத்தில் மோங்கால் பாலத்தில் மத்திய ரிசர்வ் காவல்படை சோதனை சாவடி உள்ளது.
இன்று காலை பதிவெண் இல்லாத ஸ்கார்பியோ வாகனம் ஒன்று காவல்சாவடியை நோக்கி வேகமாக அத்துமீறி வந்த நிலையில் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் வாகனத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் வாகன ஓட்டி தப்பித்து சென்றுள்ளான், இறந்தவனின் அடையாளம் விசாரிக்கப்பட்டு வருகிறது.