விமானந்தாங்கி கப்பலில் பணிபுரிவோருக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் புதிய விசா கார்ட் !!
1 min read

விமானந்தாங்கி கப்பலில் பணிபுரிவோருக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் புதிய விசா கார்ட் !!

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பாரத ஸ்டேட் வங்கி நேவ்-இகேஷ் (NAV-eCash) என்ற பெயரில் புதிய விசா கார்ட் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்கான நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் கார்வார் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்து ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் வைத்து நடைபெற்றது.

இதில் மேற்கு கடற்படை கட்டளையக தளபதி வைஸ் அட்மிரல் ஹரி குமார் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் ரிடெய்ல் மற்றும் டிஜிட்டல் பேங்கிங் பிரிவின் மேலாண்மை இயக்குனர் ஸெட்டி ஆகியோர் கலந்து கொண்டு கார்டை அறிமுகம் செய்தனர்.

இந்திய கடற்படையின் குழு ஒன்றின் சிந்தனையில் உதித்து பின்னர் பாரத ஸ்டேட் வங்கியால் உருவாக்கப்பட்ட இந்த கார்டு மூலமாக ஆழ்கடலில் பணியாற்றும் கடற்படையினர் கடலோர காவல் படையினர் எண்ணெய் கிணறு பணியாளர்கள் ஆகியோர் பண பரிவர்த்தனை செய்து பயன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.