பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டாரில் அதிகரிக்கும் பாகிஸ்தான் ட்ரோன்களின் நடமாட்டம் !!

  • Tamil Defense
  • October 31, 2021
  • Comments Off on பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டாரில் அதிகரிக்கும் பாகிஸ்தான் ட்ரோன்களின் நடமாட்டம் !!

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் செக்டாரில் பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானங்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த வருடம் இதுவரை 17 முறை ஆளில்லா விமானங்கள் குர்தாஸ்பூர் செக்டாரில் மட்டும் ஊடுருவி உள்ளன,அதில் ஆகஸ்ட் 15 க்கு பிறகு மட்டுமே 6 முறை ஊடுருவல் நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் ட்ரோன்கள் மூலமாக போதை மருந்து பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன, இவற்றை அவ்வப்போது எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்துவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த அதிகரிக்கும் ஊடுருவல்கள் காரணமாக எல்லையோரம் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.