
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு தொலைதூர குண்டை சோதனை செய்துள்ளன.
இந்திய விமானப்படையின் போர் விமானம் ஒன்றில் இருந்து வீசப்பட்ட இந்த வெடிகுண்டு வெற்றிகரமாக இலக்கினை துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிகுண்டு இலக்கை நோக்கி பயணித்ததை பல்வேறு வகையான சென்சார்களை கொண்டு விஞ்ஞானிகள் கண்காணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனை ஒடிசா மாநிலம் சன்டிபூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் வைத்து நடைபெற்றது என்பது கூடுதல் தகவல் ஆகும்.
இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் DRDO தலைவர் சதிஷ் ரெட்டி ஆகியோர் விஞ்ஞானிகள் மற்றும் விமானப்படைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.