
300 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தை சீர்படுத்தும் நோக்கில் 7 புதிய நிறுவனங்களாக பிரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வருகிற 15 ஆம் தேதி முதல் இந்த 7 புதிய நிறுவனங்கள் செயல்பட துவங்க உள்ள நிலையில் அவற்றிற்கு முப்படைகள் மற்றும் துணை ராணுவம் ஆகியவற்றின் 65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வரிசை கட்டி உள்ளன.
அக்டோபர் 15ஆம் தேதி முதலாக ஏழு நிறுவனங்களும் தங்களது செயல்பாட்டை துவங்க உள்ளன அவற்றிற்கு சிறப்பு காலநிலை உடைகள், கவச வாகனங்கள், தோட்டாக்கள் வெடிபொருட்கள் ஆகியவற்றிற்கான ஒப்பநதங்கள் வழங்கப்பட உள்ளன என கூறப்படுகிறது.
இந்த புதிய 7 நிறுவனங்களாவன,
AWEIL, TCL, AAV, MIL, IOL, GIL, YIL ஆகியவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.