வழக்கத்திற்கு மாறாக டேசர்கள் மற்றும் மிளகு ஸ்பிரேக்களுடன் ரோந்து வரும் சீன வீரர்கள் !!
1 min read

வழக்கத்திற்கு மாறாக டேசர்கள் மற்றும் மிளகு ஸ்பிரேக்களுடன் ரோந்து வரும் சீன வீரர்கள் !!

சீன ராணுவ வீரர்கள் மிளகு ஸ்பிரே, டேசர்கள், உருட்டு கட்டைகள் தடிகள் என வழக்கத்திற்கு மாறான ஆயுதங்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் கைத்துப்பாக்கிகளுடன் ரோந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேசர் என்பது மின்சார துப்பாக்கி ஆகும் இதுதவிர வீசி தாக்குவதற்கு தோதான கூர்மையான கோடாரி போன்ற ஆயுதங்கள், கூர்மையான முட்கள் கொண்ட தடிகள் பாதுகாப்பு கவசங்கள் என வலம் வருகின்றனர்.

இவற்றால் தாக்கப்படும் பட்சத்தில் உயரிழப்பு அல்லது படுகாயம் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகமாகும் ஏற்கனவே கல்வானில் சீன வீரர்கள் இத்தகைய ஆயுதங்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய வீரர்களும் கவச உடைகளை பெற தொடங்கி உள்ளனர், நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று மின்சார தடிகள், கூர்மையான முட்கள் கொண்ட தடிகளை தற்போது ராணுவத்திற்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.