
கடந்த இரண்டு நாட்களில் இதுவயை இல்லாத அளவுக்கு மிக அதிகமான சீன விமானப்படை விமானங்கள் தங்களது வான் பாதுகாப்பு பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக தைவான் கூறி உள்ளது.
தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரண்டு தொகுதியாக வெள்ளிக்கிழமை அன்று அணு ஆயுத தாக்குதல் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 38 விமானங்களும்,
சனிக்கிழமை அன்று 20 சீன விமானப்படை போர் விமானங்களும் தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு பகுதிக்குள்ளாக அத்துமீறி நுழைந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
தைவான் கடந்த ஒராண்டாக சீன விமானப்படையின் அத்துமீறல்கள் பற்றி தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.