அருணாச்சல பிரதேசத்தில் சீனர்களை பந்தாடிய இந்திய ராணுவம் !!

  • Tamil Defense
  • October 10, 2021
  • Comments Off on அருணாச்சல பிரதேசத்தில் சீனர்களை பந்தாடிய இந்திய ராணுவம் !!

சீன ராணுவ துருப்புகள் சுமார் 200 பேர் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அத்துமீறி நுழைந்து காவல் சாவடிகளை சேதப்படுத்த முயன்ற போது தடுத்து கைது செய்யப்பட்டனர்.

பூம்லா கணவாய் அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தில் இந்திய வீரர்கள் சீன வீரர்களை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமின்றி அவர்களை அடித்து துவைத்துள்ளனர்.

பின்னர் இருதரப்பு ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் சீன வீரர்களை இந்திய படையினர் விடுவித்து உள்ளனர்.

இதற்கு எதிர்வினையாக கோபத்தில் சீனர்கள் கல்வான் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தற்போது பகிர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.