
இந்தியா தற்போது 11 போயிங் பொசைடான்-8ஐ ரக தொலைதூர கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்களை இயக்கி வருகிறது, தற்போது 20க்கும் அதிகமான விமானங்களை இயக்கும் நோக்கில் மேலதிக விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.
இந்த விமானங்கள் உலகின் மிகவும் அதிநவீனமான மற்றும் ஆபத்தான தொலைதூர கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் என பெயர் பெற்றவை ஆகும்.
இவற்றில் இருக்கும் மல்டி மோட் ரேடார் கப்பல்கள் நீர்மூழ்கிகள் வானூர்திகள் ஆகியவற்றை கண்டுபிடிக்கும், வயிற்று பகுதியில் இருக்கும் ரேடார் விமானத்தின் பின்னே கண்காணிக்க உதவும்,
மேலும் வால் பகுதியில் இருக்கும் காந்த செயல்பாடுகள் கண்டறியும் சென்சார் நீர்மூழ்கிகள் கடலுக்கு அடியில் தங்களது உலோக உடல்பகுதியில் இருந்து வெளிபடுத்தும் காந்த அலைகளை கண்டுபிடிக்கும்.
பின்னர் இலக்கை அடையாளம் கண்டு தனது மார்க்54 நீரடிகணைகள் மூலமாக தாக்கி அழிக்கும் அல்லது இதர கப்பல்கள் நீர்மூழ்கிகளுக்கு தகவல் அனுப்பி தாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானங்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் வலிமைக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே சீன கடற்படை கப்பல்களுக்கு இந்த விமானங்கள் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.