அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் சைபர் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நிகோலஸ் சைல்லன், இவர் அமெரிக்க விமானப்படையின் முதன்மை மென்பொருள் அதிகாரியாக பணியில் இணைந்தவர் ஆவார்.
பெண்டகனில் மிகவும் அதிநவீனமான மற்றும் பாதுகாப்பான மென்பொருளை நிர்மானிக்கும் பணியை செய்து வந்த நிலையில் சீனாவின் சைபர் பாதுகாப்பு திறன் அமெரிக்காவை விட சிறப்பாக இருப்பதாக கூறி ராஜினாமா செய்தார்.
இதற்கு காரணமாக பெண்டகன் சைபர் பாதுகாப்பு மற்றும் சுய நுண்ணறிவு திறன் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்க தவறியதை சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும் அவர் அமெரிக்கா சீனாவுடன் போட்டி போடும் நிலையில் இல்லை எனவும் சீனாவை ஒப்பிடுகையில் அமெரிக்காவின் சுய நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு திறன்கள் அங்கன்வாடி குழந்தைகளை போன்று உள்ளதாகவும்,
சீனா மிக மிக முன்னனியில் உள்ளதாகவும் கூறியுள்ளார் இவரது பேச்சிற்கு வலு சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் பல்வேறு துறையில் அடிக்கடி ஹேக்கிங் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.