
கல்வான் பள்ளதாக்கு பகுதியில் எல்லை கட்டுபாட்டு கோட்டில் இருந்து வெறுமனே 1 கிலோமீட்டர் தொலைவில் சீன ராணுவம் கட்டுமான பணிகளை செய்து வருகிறது.
புதிய புதிய கட்டிடங்களை கட்டி வரும் நிலையில் ஃபுக்சே பகுதியில் ஒரு ஆளில்லா விமான தளத்தை கட்டி வருவதாகவும் தெரிகிறது.
மலை முகட்டில் இருக்கும் இந்த தளத்தில் இருந்து இந்திய நிலைகள் மற்றும் செயல்பாடுகளை தெள்ள தெளிவாக கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீனா சுரங்கப்பாதை மற்றும் இரண்டு சாலைகளை வெவ்வேறு இடங்களில் அமைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.