
சீனா சமீபத்தில் அணுசக்தியால் இயங்கும் திறன் கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணை ஒன்றை தாழ்வான உயரத்தில் உலகை சுற்றி பறக்க வைத்து சோதனை செய்துள்ளது.
இந்த சோதனை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றுள்ளது உலகத்தையே சுற்றி வந்த அந்த ஏவுகணை இலக்கிலிருந்து இரண்டு மைல் தள்ளி போய் தாக்கியுள்ளது.
எனினும் ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தில் சீனாவின் அடைந்துள்ள வளர்ச்சி அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது அமெரிக்க உளவுத்துறை நினைத்ததை விடவும் சீனா வேகமாக முன்னோக்கி செல்வது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது குறித்து சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் எந்தவித கருத்தையோ அல்லது அறிக்கையோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.