
சீனா இந்தியா உடனான எல்லை பகுதியில் சுமார் 100 பல்குழல் ராக்கெட் ஏவும் அமைப்புகளை நிலை நிறுத்தி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சீனா தற்போது எல்லையோரம் நிலை நிறுத்தி உள்ள இந்த பல்குழல் ராக்கெட் ஏவும் அமைப்புகள் தொலைதூர தாக்குதலுக்கு ஏற்றவை எனவும் கூறப்படுகிறது.
இந்திய ராணுவமும் சீன எல்லையோரம் தனது பங்குக்கு கே9 வஜ்ரா தானியங்கி பிரங்கிகள், 3 ரெஜிமென்ட் எம்777 பிரங்கிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட எல்70 ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கிகளை நிலைநிறுத்தி உள்ளது.
பனிக்காலம் துவங்கி உள்ள நிலையில் இந்தியா மற்றும் சீனா வீரர்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை எல்லையோரம் குவித்து வருவதும் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைவதும் கசப்பான நிலையை எடுத்து காட்டுகிறது.