
இந்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி சமீபத்தில் சீனா தொடர்ந்து எல்லையோரம் அதிக அளவில் வீரர்கள் மற்றும் தளவாடங்களை குவித்து வருவதாக விமர்சித்தார்.
இந்தியாவும் இதற்கு பதிலடியாக படைகளை நகர்த்தி வரும் பட்சத்தில் கூட சீனா பொறுப்பாக செயல்பட்டு எல்லையோரம் அமைதி திரும்ப உதவும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
மேலும் பேசும் போது இந்தியா கிழக்கு லடாக்கில் சீனாவின் ஒருதலைபட்சமான செயல்பாடுகளை ஒரு நாளும் ஏற்று கொள்ள போவதில்லை என தெரிவித்தார்.