
இந்திய சீன எல்லையோரம் சீனா கட்டி தனது வழக்கமான நரிதந்திர சூழ்ச்சிகளை அரங்கேற்றி வருவதாக கிழக்கு பிராந்திய தரைப்படை தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.
இந்த புதிய கிராமங்களை சீனா எப்படி பயன்படுத்தி கொள்ளும் என்கிற சிந்தனைகளும் இந்தியாவின் திட்டங்கள் மற்றும் கணக்குகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் பேசிய அவர் எல்லைக்கு அப்பால் சீன நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளதாகவும் ஆனால் எல்லையில் இருந்து தொலைவில் தான் எனவும்,
ஆகவே நாங்கள் எல்லைக்கு அருகில் மற்றும் எல்லைக்கு அப்பால் உள்ள பகுதிகள் மீதான கண்காணிப்பை பன்மடங்கு அதிகரித்து உள்ளோம் சில இடங்களில் சற்றே அதிகமாக வீரர்களை நிலைநிறுத்தி உள்ளதாகவும்
மேலும் ஆளில்லா விமானங்கள், அதிநவீன தொலை தொடர்பு கருவிகள், தகவல் இடைமறிப்பு கருவிகள், இரவு பார்வை கருவிகள் ஆகியவற்றை வீரர்கள் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.