
இந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் நரவாணே சமீபத்தில் இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் போரின் நோக்கம் “வெல்வது” என தொடரும் நிலையில் அதற்கான தன்மைகள் மட்டும் மாற்றமடைகிறது என அவர் கூறினார்.
அதாவது போரில் பயன்படுத்தி வரப்படும் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக மாற்றம் அடைந்து வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் மிகவும் அதிநவீனமான தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் பயன்படுத்தி வரப்படுவது அனைவரும் அறிந்ததே,
அந்த வகையில் அதிநவீனமான தொழில்நுட்பங்கள் மற்றும் தளவாட்ங்களை இந்தியா படிப்படியாக தனது படைகளில் இணைத்து வருவதாகவும் அவர் கூறினார்.