
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊரி செக்டாரில் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே இந்திய தரைப்படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் எல்லை கட்டுபாட்டு கோட்டுக்கு அப்பால் இருந்து ஊடுருவ முயன்ற சிலரின் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகளை கண்டு அப்பகுதிக்கு விரைந்தனர்.
அவர்கள் தங்களை நோக்கி வரும் ராணுவத்தினரை கண்டதும் தங்களிடம் இருந்த பைகளை விட்டுவிட்டு தப்பி ஒடினர்.
அவற்றை கைபற்றிய ராணுவத்தினர் சுமார் 25 கிலோ எடையிலான கள்ள சந்தையில் 30 கோடி அளவு பெறுமானம் கொண்ட ஹெராயின் இருப்பதை அறிந்து அதை கைபற்றினர்.