
அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் தளபதியான இயக்குநர் ஜெனரல் – லெஃப்டினன்ட் ஜெனரல் பி சி நாயர் தனது படையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார.
அப்போது அவர் தொடர்ந்து மாற்றமடைந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் ராணுவ சூழல்களுக்கு இடையே விழிப்புடன் இருக்கும்படி அறிவுரை வழங்கினார்.
துணை ராணுவ படைகளுள் ஒன்றான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு பணிகளையும் மியான்மர் எல்லையை பாதுகாக்கும் பணியையும் மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.