கடந்த 15 மாதங்களில் 16000 கோடி மதிப்பிலான சுமார் 118 ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்து !!

  • Tamil Defense
  • October 31, 2021
  • Comments Off on கடந்த 15 மாதங்களில் 16000 கோடி மதிப்பிலான சுமார் 118 ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்து !!

கடந்த 12 முதல் 15 மாதங்களில் இந்திய தரைப்படையானது 16000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சுமார் 118 ஒப்பந்தங்களை இறுதி செய்து கையெழுத்து இட்டுள்ளது.

இந்த தகவலை தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே ஊடகவியலாளர் நிதின் கோகலே உடன் நடைபெற்ற சந்திப்பில் கூறினார்.

மேலும் அவர் பேசும்போது இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே வருடத்தில் தற்போது தான் இவ்வளவு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளதாகவும்

அவற்றில் பெரும் பங்கு இந்திய நிறுவனங்களுடனானவை அதாவது சுமார் 55 சதவிகித அளவிலான ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சீனா உடனான எல்லை பிரச்சினைக்கு பிறகு மத்திய அரசு முப்படைகளுக்கும் உடனடி மற்றும் விரைவு கொள்முதலுக்காக சிறப்பு அதிகாரம் வழங்கியது.

அந்த சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தான் தற்போது இந்த 118 ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.