
உளவுத்துறை அமைப்புகள் முக்கிய இடங்களில் பணியாற்றி வரும் பாதுகாப்பு படை வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த எச்சரிக்கை விடுத்துள்ளன.
அதாவது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மொபைல்களை ஹாக் செய்து தகவல்களை பெற முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது.
இதனால் தங்களை அடையாளம் காட்டி கொடுக்கும் வகையில் சமூக வலைதளங்களை பயன்படுத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் துணை ராணுவ படைகளுக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் இத்தகைய அறிவுரை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.