
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அர்மீனியா நாட்டிற்கு சுற்றுபயணமாக சென்றுள்ளார் அங்கு தனது சகா அராரத் மிர்ஸோயனை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்மீனிய வெளியுறவு அமைச்சர் அராரத் மிர்ஸோயன் இந்தியா அர்மீனாயா இடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளதாகவும்,
அர்மீனியாவின் வளர்ச்சியில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மிகப்பெரும் பங்களிப்பினை செய்து வருவதாகவும் கூறிய அவர் தொடர்ந்து,
அர்மீனியா மற்றும் அஸர்பெய்ஜான் இடையேயான பிரச்சினையில் இந்தியாவின் ஆதரவு மிகப்பெரிய உதவி எனவும்,
அஸர்பெய்ஜான் படைகள் அர்மீனியாவுக்குள் அத்துமீறி நுழைந்த பகுதிகளில் இருந்து வெளியேறும்படி இந்தியா அறிக்கை விட்டதை பாராட்டுவதாகவும்
தொடர்ந்து அர்மீனியா இந்தியாவுக்கு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தனது ஆதரவினை அளிக்கும் எனவும் அவர் கூறினார்.