அர்ஜென்டினா தனது போர் விமான தேர்வில் இந்திய தேஜாஸூம் இருப்பதாக அறிவிப்பு !!

  • Tamil Defense
  • October 21, 2021
  • Comments Off on அர்ஜென்டினா தனது போர் விமான தேர்வில் இந்திய தேஜாஸூம் இருப்பதாக அறிவிப்பு !!

அர்ஜென்டினா விமானப்படை உலகின் மிக பலவீனமான விமானப்படைகளில் ஒன்றாக கருதப்படுகிறது
தற்போது அந்நாட்டு படையிடம் வெறுமனே 23 ஏ4 ஸ்கைஹாக் விமானங்கள் மட்டுமே உள்ளன.

மிக நீண்ட காலமாகவே ஸ்பெயின், பிரேசில், சுவீடன், இஸ்ரேல், தென் கொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து போர் விமானங்கள் வாங்க முயற்சித்த போது இங்கிலாந்து அமெரிக்கா மூலமாக அழுத்தம் கொடுத்து முட்டுக்கட்டை போட்டது.

ஆகவே தற்போது எப்படியேனும் போர் விமானங்களை அர்ஜென்டினா வாங்க துடித்து வருகிறது இதற்காக அந்நாட்டு அரசு சுமார் 664 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

பின்னர் சீன பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்-17 விமானத்தை அர்ஜென்டினா தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதனை அர்ஜென்டினா மறுத்துள்ளது தற்போது இந்தியாவின் தேஜாஸ் போட்டியில் உள்ளதாக அறிவித்தது.

இதுபற்றி அர்ஜென்டினா விமானப்படை தலைவர் கூறும்போது அமெரிக்கா விரைவில் ஒரு விமானத்தை ஆஃபர் செய்யலாம் எனவும், தற்போது ரஷ்யா மிக்29 மற்றும் மிக்35 ஆகிய விமானங்களை விற்க விரும்புகிறது.

இவற்றை தவிர சீனாவின் ஜே.எஃப்-17 மற்றும் நமது தேஜாஸும் போட்டியில் உள்ளது, ஆனால் இந்திய சீன விமானங்களில் இங்கிலாந்து தொழில்நுட்பங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் அர்ஜென்டினாவின் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையில் நமது தேஜாஸ் மட்டுமே உள்ளது மேலும் இந்த டீல் வெற்றிகரமாக நடைபெற்றால் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.