
இன்று காலை வெளிவந்த சில அமெரிக்க கடற்படை வட்டார தகவல்களின்படி தென்சீன கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த நீர்மூழ்கி கப்பல் விபத்தை சந்தித்து உள்ளது.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ். கனெக்டிக்கட் (USS CONNECTICUT SSN-22) எனும் சீ வூல்ஃப் ரக அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியே மர்ம பொருள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் 2 வீரர்கள் காயமடைந்து உள்ளதாகவும் கப்பலுக்கு பெரிய சேதம் ஏதுமில்லை எனவும் தற்போது குவாம் கடற்படை தளத்திற்கு பராமரிப்பு பணிகளுக்காக சென்று உள்ளதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
ஆனால் நீர்மூழ்கி கப்பல் எதன் மீது மோதியது என்பதை அமெரிக்க கடற்படை கூறவில்லை விபத்தும் ஐந்து நாட்கள் முன்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.