
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் இருந்து வெளியாகும் தகவல்கள் அலாஸ்காவில் நடைபெற்ற ஒரு தொலைதூர ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்தததை உறுதி செய்கின்றன.
இந்த சோதனை பற்றி அதிக தகவல்களை வெளியிடாமல் பென்டகன் ரகசியம் காத்து வருகிறது ஆனால் இந்த ஏவுகணையின் வடிவமைப்பானது அமெரிக்க தரைப்படையின் டார்க் ஈகிள் மற்றும் கடற்படையின் வழக்கமான உடனடி தாக்குதல் அமைப்பில் பயன்படுத்தபடலாம் என கூறப்படுகிறது.
இந்த ஏவுகணையின் பூஸ்டர் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வி அடைந்ததாக கூறப்படும் நிலையில், இந்த ஏவுகணையால் மேலேழும்ப முடியுமா எனும் சந்தேகமும் உள்ளது.
இந்த திட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தரைப்படை மற்றும் கடற்படை இணைந்து செயல்பட்டு வருகின்றன இதனை கப்பல்கள் நீர்மூழ்கிகள் மற்றும் தரைப்பகுதியில் இருந்து பயன்படுத்தும் வகையில் தயாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.