கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சனம் செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம் அமெரிக்க அதிபர் பைடன் தைவான் மீது சீனா தாக்குதல் தொடுத்தால் அமெரிக்கா களமிறங்கும் என ஆதரவு அளித்ததே ஆகும் என்றார்.
ஆனால் இது அமெரிக்கா மிக நீண்ட காலமாக தைவானை சீனாவின் ஒரு பகுதியாக கருதும் ஒரே சீனா கொள்கைக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எதிரானதாகும்.
மேலும் வெள்ளை மாளிகை நிர்வாகம் மெதுவாக அமெரிக்காவின் நிலைபாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை மழுப்பியது ஆனால் சீனாவில் இது கடும் அதிர்வலைகளை உருவாக்கி இருந்தது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டினிடம் நேட்டோ நிகழ்வு ஒன்றில் தைவானை அமெரிக்கா பாதுகாக்குமா என ஒரு நிருபர் கேட்டதற்கு அவர் உறுதியற்ற நிகழ்வுகளை பற்றி பேசுவதில் பயனில்லை எனவும்
இரண்டு தரப்புக்கும் இடையிலான பிரச்சினை போராக மாறுவதை அமெரிக்க அதிபர் படைன் உட்பட யாரும் விரும்பவில்லை எனவும் அமெரிக்கா ஒரே சீனா நிலைபாட்டில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.