மேற்கு கடற்படை தலைமையகத்தை விசிட் செய்த அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரி !!

  • Tamil Defense
  • October 18, 2021
  • Comments Off on மேற்கு கடற்படை தலைமையகத்தை விசிட் செய்த அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரி !!

அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகள் பிரிவின தலைவரான அட்மிரல் மைக்கேல் கில்டே இந்திய கடற்படையின் மேற்கு கட்டளையத்தின் தலைமையகத்தை விசிட் செய்தார்.

அவரை மேற்கு கடற்படை கட்டளையக தளபதி வைஸ் அட்மிரல் ஹரி குமார் வரவேற்று தலைமையகத்தை சுற்றி காட்டி பல்வேறு விஷயங்களை குறித்து விளக்கினார்.

மேற்கு பிராந்திய கடற்படையின் மனிதநேய பணிகள், கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு, கொரோனா பேரிடர் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.

பின்னர் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பு கடற்படை உறவுகள் ஒத்துழைப்பு இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு ஆகியவற்றை குறித்து பேசி கொண்டனர்.

பின்னர் அட்மிரல் மைக்கேல் கில்டே வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக மேற்கு கடற்படை மற்றும் தென்னக கடற்படை கட்டளையகங்களை சேர்ந்த பல்வேறு அதிகாரிகளுடன் வருங்கால போர்முறை எனும் தலைப்பில் பேசினார்.