பாகிஸ்தான் அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு நம்பிக்கை இல்லை !!

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ அதாவது மத்திய உளவு முகமையின் முன்னாள் தலைவரான லியோன் பனெட்டா சமீபத்தில் பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதாவது பாகிஸ்தான் நாட்டினுடைய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் லியோன் பனெட்டா ஒசாமா பின்லாடன் விஷயத்தில் கூட பாகிஸ்தான் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தாலேயே அமெரிக்கா நேரடியாக நடவடிக்கை எடுத்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.