நகரும் இலக்குகளை கூட அக்னி-1பி ஏவுகணையால் தாக்க முடியும் முன்னாள் DRDO தலைவர் !!
1 min read

நகரும் இலக்குகளை கூட அக்னி-1பி ஏவுகணையால் தாக்க முடியும் முன்னாள் DRDO தலைவர் !!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான முனைவர் அவினாஷ் சந்தர் அக்னி-1பி ஏவுகணையால் நகரும் இலக்குகளை கூட தாக்க முடியும் என கூறியுள்ளார்.

இந்த அக்னி-1 பிரைம் ஏவுகணையானது இரண்டு நிலைகள் கொண்ட திட எரிபொருளில் இயங்கும் கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணையாகும், இது 1000 முதல் 2000 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்டதாகும்.

முனைவர். அவினாஷ் சந்தர் கூறும்போது இந்த ஏவுகணைகளை கொண்டு விமானந்தாங்கி கப்பல் போன்ற நகரும் இலக்குகளை தாக்கி அழிக்க முடியும் இவற்றை கேரியர் கில்லர் என சொன்னால் அது மிகையல்ல என்றார்.

இந்த ஏவுகணையானது விமானந்தாங்கி கப்பல் மட்டுமின்றி அந்த ஒட்டுமொத்த படையணியையே அழிக்க பயன்படுத்தி கொள்ள முடியும், இது அணு ஆயுதம் அல்லது வழக்கமான வெடி பொருளுடன் ஏவப்படும்.

சீனா இந்திய பெருங்கடல் பகுதியில் நிரந்தரமாக ஒரு விமானந்தாங்கி கப்பல் படையணியை நிறுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியாவின் எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.