உள்நாட்டு விமானந்தாங்கி கப்பல்களை எதிர்ப்போரை சாடிய இந்திய கடற்படை தளபதி !!
1 min read

உள்நாட்டு விமானந்தாங்கி கப்பல்களை எதிர்ப்போரை சாடிய இந்திய கடற்படை தளபதி !!

இந்திய கடற்படையின் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் அவர்களிடம் ஊடகம் ஒன்றின் நிருபர் உள்நாட்டு விமானந்தாங்கி கப்பல்கள் வீண் செலவு என கூறி பலர் எதிர்க்கிறார்கள் உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்

அதற்கு பதிலளித்த இந்திய கடற்படை தளபதி உள்நாட்டு விமானந்தாங்கி கப்பல்கள் ஒரு போதும் வீண் செலவல்ல எனவும், விக்ராந்தின் கட்டுமானம் மூலமாக 550 நிறுவனங்கள் மற்றும் 100 சிறு குறு உருவாகி உள்ளதாகவும்,

மேலும் இதில் பயன்படுத்தப்பட்ட இரும்பு முழுக்க இந்திய தயாரிப்பாகும் இவற்றின் காரணமாக பல்லாயிரம் வேலைகள் உருவாகி உள்ளதாகவும் இதனை வீண் செலவு என ஒருபோதும் சொல்லி விட முடியாது என பதிலளித்தார்.

மேலும் பேசுகையில் வான் பாதுகாப்பு கருதி விமானப்படை விமானங்களை நம்பி ஒரு கடற்படை கடலோரத்தில் இயங்க முடியாது அதுவே விமானந்தாங்கி கப்பல்கள் இந்த வான் பாதுகாப்பை வழங்குகின்றன ஆகவே கடலில் வான்சக்தி இன்றியமையாதது என்றார்.

விக்ராந்தின் மதிப்பு சுமார் 23,000 கோடி ரூபாய் ஆகும் இரண்டாவது விமானந்தாங்கி கப்பல் கட்டப்பட்டால் அதன் மதிப்பானது சுமார் 90,000 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.