
கடந்த 24 மணி நேரத்தில் காஷ்மீரின் ஐந்து முக்கிய இடங்களில் நடைபெற்ற என்கௌன்டர்களில் ஏழு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படைகள் வீழ்த்தியுள்ளன.
பூஞ்ச்- ராஜோரி மாவட்ட எல்லையில் நடைபெற்ற சண்டையில் நமது வீரர்கள் ஐந்து பேர் வீரமரணம் அடைந்தனர்.
தெற்கு காஷ்மீரின் சோபியானில் இரு இடங்களில் நடைபெற்ற என்கௌன்டர்களில் ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.அதே போல அனந்தநாக்கிலும் பந்திபோரா பகுதியிலும் நடைபெற்ற இரு என்கௌன்டர்களில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களில் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.ஏழு இடங்களில் பயங்கரவாதிகள் பொதுமக்களை தாக்கியுள்ளனர்.இதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
இதன் பிறகு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு/எதிர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது பாதுகாப்பு படைகள்.பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு துணை போனதாக 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் ரெய்டு மற்றும் தேடுதல் வேட்டைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.