நடுவானில் எரிபொருள் நிரப்பும் 6 டேங்கர் விமானங்களை வாங்க திட்டம் !!

  • Tamil Defense
  • October 7, 2021
  • Comments Off on நடுவானில் எரிபொருள் நிரப்பும் 6 டேங்கர் விமானங்களை வாங்க திட்டம் !!

இந்திய விமானப்படைக்கு நீண்ட காலமாகவே நடுவானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பக்கூடிய டேங்கர் விமானங்களை வாங்கும் முயற்சி தோல்வி அடைந்து வந்த நிலையில்,

தற்போது மீண்டும் 6 டேங்கர் விமானங்களை வாங்குவதற்கான நிபந்தனைகள் வகுக்கப்பட்டு வருவதாக இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுதிரி கூறினார்.

இதற்கான போட்டியில் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ330-MRTT மற்றும் போயிங் நிறுவனத்தின் கேசி-46 ஆகியவை உள்ளன, இவற்றில் ஏ330யின் திறன்கள் சிறப்பாக உள்ளது அதே நேரத்தில் போயிங் விமானத்தை விடவும் விலை குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.