
நேற்று உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் அமைந்துள்ள ITBP அகாடமியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் 38 மருத்துவ அதிகாரிகள் படையில் அதிகாரிகளாக இணைந்தனர்.
இவர்கள் அனைவரும் பயிற்சி காலத்தின் போதே தில்லியில் அமைக்கப்பட்ட சர்தார் பட்டேல் கொரோனா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
பின்னர் நிலைமை சீரானதும் பயிற்சி மையத்திற்கு மீண்டும் பயிற்சியை தொடர திரும்பினர் இதற்காக பயிற்சி காலத்தின் போதே இவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த அதிகாரிகளுக்கு வரைபடம் படித்தல், ஆயுத பயிற்சி, மேலாண்மை, சட்டம் மற்றும் மனித உரிமைகள், உடற்பயிற்சி, போர் தந்திரங்கள் உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டன.