
கேரள மாநிலத்தில் 3200 ஸ்லீப்பர் செல்கள் மற்றும் சுமார் 32000 பயங்கரவாதிகள் இருப்பதாக ஜிஹாத் வாட்ச் எனும் அமெரிக்க அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தில்லியில் இருந்து கேரளா சென்ற தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு குழு ஒன்று கண்ணூர் மாவட்டம் தானாவில் ஒரு வீட்டில் வசித்து வந்த இரு பெண்களை கைது செய்து விசாரணை நடத்தியது.
அந்த இருவரும் ஷிஃபா ஹாரீஸ் என்பதும் மிஸா சித்திக் என்பதும் கேரளாவில் சுமார் 3200 இஸ்லாமிக் ஸ்டேட் ஸ்லீப்பர் செல்கள் இயங்கி வருவதையும் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு செல்லிலும் 10 உறுப்பினர்கள் வீதம் சுமார் 32000 பயங்கரவாதிகள் இருக்கலாம் எனவும் குறிப்பாக அவர்களில் 40% பெண்கள் எனும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
இதில் மிஸா ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்று அங்கிருந்து சிரியா செல்ல முயன்றதாகவும் ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
மிஸா தனது உறவுக்கார பெண்களான ஷிஃபா ஹாரீஸ் முஷாப் அன்வர் ஆகியோரை ஐ.எஸ் இயக்கத்தில் இணைய ஊக்குவித்தாகவும் தற்போது சிறையில் இருக்கும் முக்கிய கேரள ஐ.எஸ். பயங்கரவாதியான மொஹம்மது ஆமீனுடைய உத்தரவின்படி இயங்கியதாக கூறப்படுகிறது.
இவர்களில் ஷிஃபா ஹாரீஸ் ஐ.எஸ் இயக்கத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவுக்கு பணம் கொடுத்ததாகவும் அவள் உட்பட ஏழு பேர் ஹிஜ்ரா எனும் இஸ்லாமிய முறைப்படி காஷ்மீருக்கு இடம்பெயர்ந்து செல்ல திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.
பணம் வேலைவாய்ப்பு போதைப்பொருள் உடல்தேவைகள் என பல்வேறு வகையான உத்திகள் மூலமாகவும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஈர்க்கப்பட்டு முளைச்சலவை செய்யப்பட்டு பயங்கரவாத எண்ணம் ஊக்குவிக்கப்படுகிறது.
கேரளா முழுவதும் இவர்களின் நெட்வொர்க் பரவி உள்ளது, வெளிப்படையாக செயல்படாமல் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர், ஆஃப்கன் மற்றும் பாகிஸ்தானில் தொடர்புகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.