Day: October 31, 2021

நகரும் இலக்குகளை கூட அக்னி-1பி ஏவுகணையால் தாக்க முடியும் முன்னாள் DRDO தலைவர் !!

October 31, 2021

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான முனைவர் அவினாஷ் சந்தர் அக்னி-1பி ஏவுகணையால் நகரும் இலக்குகளை கூட தாக்க முடியும் என கூறியுள்ளார். இந்த அக்னி-1 பிரைம் ஏவுகணையானது இரண்டு நிலைகள் கொண்ட திட எரிபொருளில் இயங்கும் கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணையாகும், இது 1000 முதல் 2000 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்டதாகும். முனைவர். அவினாஷ் சந்தர் கூறும்போது இந்த ஏவுகணைகளை கொண்டு விமானந்தாங்கி கப்பல் போன்ற நகரும் இலக்குகளை தாக்கி அழிக்க […]

Read More

பாகிஸ்தான் அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு நம்பிக்கை இல்லை !!

October 31, 2021

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ அதாவது மத்திய உளவு முகமையின் முன்னாள் தலைவரான லியோன் பனெட்டா சமீபத்தில் பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது பாகிஸ்தான் நாட்டினுடைய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என கூறியுள்ளார். இதற்கு முன்னர் லியோன் பனெட்டா ஒசாமா பின்லாடன் விஷயத்தில் கூட பாகிஸ்தான் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தாலேயே அமெரிக்கா நேரடியாக நடவடிக்கை எடுத்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தியாவிலேயே கட்டப்பட்ட முதலாவது விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பலை பெற்று கொண்ட இந்திய கடற்படை !!

October 31, 2021

இந்திய கடற்படை நேற்று ப்ராஜெக்ட்-5 பி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் விசாகப்பட்டினம் ரக வழிகாட்டப்பட்ட ஏவுகணை நாசகாரி கப்பல்களில் முதல் கப்பலை பெற்று கொண்டது. ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் என பெயரிடப்பட்டுள்ள இந்த முதல் கப்பலானது பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படையில் சேவையில் இருக்கும் கொல்கத்தா ரக நாசகாரி கப்பல்களின் மேம்பட்ட வடிவமாகும். இந்த விசாகப்பட்டினம் ரகத்தில் விசாகப்பட்டினம், இம்பால், மர்மகோவா மற்றும் போர்பந்தர் என […]

Read More

ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய லியனார்டோ நிறுவனத்தின் மீதான தடையை நீக்க இத்தாலி மற்றும் இந்தியா ஆலோசனை !!

October 31, 2021

கடந்த 2006-2007 வாக்கில் இந்திய விமானப்படைக்கு 12 வி.ஐ.பி ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியில் இருந்து அகஸ்டா வெஸ்ட்லான்ட் ரக தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இந்த ஹெலிகாப்டரை தயாரித்த GKN மற்றும் FINMECCANICA ஆகிய நிறுவனங்கள் ஆர்டரை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தது தெரிய வந்த நிலையில் அந்த நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டது. தற்போது GKN தனது பங்குகளை FINMECCANICA நிறுவனத்திற்கு விற்ற நிலையில் அந்த நிறுவனம் லியனார்டோ என பெயரை மாற்றி இயங்கி வருகிறது. இந்த நிலையில் […]

Read More

கடந்த 15 மாதங்களில் 16000 கோடி மதிப்பிலான சுமார் 118 ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்து !!

October 31, 2021

கடந்த 12 முதல் 15 மாதங்களில் இந்திய தரைப்படையானது 16000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சுமார் 118 ஒப்பந்தங்களை இறுதி செய்து கையெழுத்து இட்டுள்ளது. இந்த தகவலை தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே ஊடகவியலாளர் நிதின் கோகலே உடன் நடைபெற்ற சந்திப்பில் கூறினார். மேலும் அவர் பேசும்போது இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே வருடத்தில் தற்போது தான் இவ்வளவு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளதாகவும் அவற்றில் பெரும் பங்கு இந்திய நிறுவனங்களுடனானவை அதாவது சுமார் […]

Read More

காஷ்மீர்: பள்ளிகள் மற்றும் சாலைகளுக்கு வீரமரணமடைந்த வீரர்களின் பெயர்களை சூட்ட திட்டம் !!

October 31, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிகள் கல்லூரிகள் சாலைகள் மற்றும் முக்கியமான கட்டிடங்களுக்கு வீரதீர செயல்கள் புரிந்த பாதுகாப்பு படையினரின் பெயர்களை சூட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் ராணுவம் துணை ராணுவம் மற்றும் காவல்துறையை சேர்ந்த வீரமரணமடைந்த வீரர்கள், வீரதீர விருது பெற்ற வீரர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இவர்கள் தவிர பிரபலமான கலைஞர்கள் சமுகத்தில் மதிப்பு மிக்க நபர்கள் என மொத்தமாக 108 பேரின பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று ஜம்மு […]

Read More

அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் தளபதி மூத்த அதிகாரிகளுடன் சந்திப்பு; எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல் !!

October 31, 2021

அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் தளபதியான இயக்குநர் ஜெனரல் – லெஃப்டினன்ட் ஜெனரல் பி சி நாயர் தனது படையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார. அப்போது அவர் தொடர்ந்து மாற்றமடைந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் ராணுவ சூழல்களுக்கு இடையே விழிப்புடன் இருக்கும்படி அறிவுரை வழங்கினார். துணை ராணுவ படைகளுள் ஒன்றான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு பணிகளையும் மியான்மர் எல்லையை பாதுகாக்கும் பணியையும் மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

போரின் தன்மைகள் மாற்றமடைகிறது: நவீன தொழில்நுட்பம் இன்றியமையாதது தரைப்படை தளபதி !!

October 31, 2021

இந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் நரவாணே சமீபத்தில் இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் போரின் நோக்கம் “வெல்வது” என தொடரும் நிலையில் அதற்கான தன்மைகள் மட்டும் மாற்றமடைகிறது என அவர் கூறினார். அதாவது போரில் பயன்படுத்தி வரப்படும் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக மாற்றம் அடைந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மிகவும் அதிநவீனமான தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் பயன்படுத்தி வரப்படுவது அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் அதிநவீனமான […]

Read More

முடிவடைந்த இந்திய அமெரிக்க யுத் அப்யாஸ் கூட்டு ராணுவ பயிற்சி !!

October 31, 2021

இந்திய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இடையே அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நடைபெற்று வந்த யுத் அப்யாஸ் கூட்டு ராணுவ பயிற்சி முடிவுக்கு வந்துள்ளது. கடைசியாக அலாஸ்காவின் பனிபடர்ந்த சூகாச் மலைத்தொடர்களின் முகடுகளில் இரண்டு ராணுவங்களும் நான்கு அணிகளாக பிரிந்து பயிற்சி மேற்கொண்டனர். இரண்டு அணிகள் இந்திய அதிகாரிகளாலும் இரண்டு அணிகள் அமெரிக்க அதிகாரிகளாலும் வழிநடத்தப்பட்டன அவை மலை உச்சி மற்றும் அடிவாரத்தில் உள்ள இலக்குகளை நோக்கி நகர்ந்தன. இந்த பயிற்சிகள் மூலமாக அமெரிக்கர்கள் ஆர்ட்டிக் கூடாரங்களை பயன்படுத்துவது […]

Read More

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டாரில் அதிகரிக்கும் பாகிஸ்தான் ட்ரோன்களின் நடமாட்டம் !!

October 31, 2021

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் செக்டாரில் பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானங்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் இதுவரை 17 முறை ஆளில்லா விமானங்கள் குர்தாஸ்பூர் செக்டாரில் மட்டும் ஊடுருவி உள்ளன,அதில் ஆகஸ்ட் 15 க்கு பிறகு மட்டுமே 6 முறை ஊடுருவல் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் ட்ரோன்கள் மூலமாக போதை மருந்து பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன, இவற்றை அவ்வப்போது எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்துவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த […]

Read More