Day: October 30, 2021

சீன எல்லையை பலப்படுத்த அமெரிக்க தளவாடங்களை களமிறக்கும் இந்திய ராணுவம் !!

October 30, 2021

இந்தியா சமீபத்தில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன ராணுவ தளவாடங்களை சீனா உடனான எல்லையை பலப்படுத்த பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய சினூக் கனரக ஹெலிகாப்டர்கள், எம்777 பிரங்கிகள், துப்பாக்கிகள் இதுதவிர சூப்பர்சானிக் ஏவுகணைகள் மற்றும் நவீன கண்காணிப்பு அமைப்பு ஒன்று ஆகியவை களத்தில் உள்ளன. மேலும் தரைப்படை முன்பு சீனாவுக்கு எளிதான இலக்காக கருதப்பட்ட தவாங் செக்டாரில் தற்போது சுமார் 30,000 வீரர்களை குவித்துள்ளது. மேலும் இந்த பகுதியையே தாக்குதல் நடத்தும் தளமாக மாற்றியமைக்க […]

Read More

சீன படைகள் மற்றும் வாகனங்களை அடையாளம் காணும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் இந்தியா !!

October 30, 2021

இந்திய தரைப்படை சீனா உடனான எல்லையோரம் சீன படைகள் மற்றும் ராணுவ வாகனங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிநவீன தொழில்நுட்பமானது தரைப்படையாலேயே உள்நாட்டில் சுய நுண்ணறிவு திறன் மற்றும் பல இதர தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய பல கண்காணிப்பு தொழில்நுட்பங்களை இந்திய தரைப்படை உள்நாட்டிலேயே தயாரித்த பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Read More

தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தானை எச்சரித்ததாக பாதுகாப்பு அமைச்சர் தகவல்

October 30, 2021

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் ஊடகங்களிடம் பேசிய போது பாகிஸ்தானை நேரடியாக எச்சரித்துள்ளதாக கூறினார். அதாவது தொடரும் பயங்கரவாத சம்பவங்களை தொடர்ந்து மீண்டும் தேவைப்பட்டால் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்ததாக அவர் கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பிரிவில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி செக்டார்களில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதும், ஊடுருவல் முயற்சிகளும் அதையொட்டிய என்கவுன்டர்களும் (தொடரும் பூஞ்ச் என்கவுன்டர்) ஆகியவை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

அமெரிக்க எஃப்18 போர் விமானங்களுக்கான 200ஆவது கன் பே கதவை டெலிவரி செய்த HAL !!

October 30, 2021

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திறக்கு தேவையான பாகங்களை தயாரித்து வழங்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் முன்னனி போர் விமானங்களில் ஒன்றான எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட் ரக விமானத்திற்கான பாகம் ஒன்றை தயாரித்து வழங்கி வருகிறது. மேற்குறிப்பிட்ட விமானத்திற்கான 200ஆவது Gun Bay Doorஐ சமீபத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நான் றுவனம் டெலிவரி செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனை HAL தலைமை மேலாண்மை இயக்குநர் மாதவன் மற்றும் […]

Read More

வீரமரணமடைந்த ராணுவ வீரரின் மகள் BSF அதிகாரிகள் பயிற்சியில் முதலாவதாக தேர்ச்சி !!

October 30, 2021

புதன்கிழமை அன்று மத்திய பிரதேச மாநிலம் டேகான்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை அகாடமியில் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு மற்றும் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் ரீது பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு முதாவதாக தேர்ச்சி பெற்றதையடுத்து வீரவாள் வழங்கி கவுரவிக்கப்பட்டார். ஹரியானா மாநிலம் ரோஹ்தாக்கை சேர்ந்த அவர் பேசும் போது நாட்டிற்கு சேவை செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் சிறு வயது முதலே சீருடை அணிய வேண்டும் என்ற ஆவல் இருந்ததாகவும் கூறினார். அசிஸ்டன்ட் கமாண்டன்ட் ரீதுவின் […]

Read More

ஜம்மு காஷ்மீரில் CRPF க்கு முதல் முறையாக நிரந்தர இடம் ஒதுக்கீடு செய்து உத்தரவு !!

October 30, 2021

ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல்படைக்கு 10 இடங்களில் நிரந்தர உறைவிடம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்தது அம்மாநில அரசு. மத்திய ரிசர்வ் காவல்படைக்கு புல்வாமாவில்-1, ஷோபியான் மற்றும் அனந்தனாக் பகுதியில் தலா 3 என மொத்தத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்க மத்திய ரிசர்வ் காவல்படை அழைக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை சரியான உறைவிடங்கள் இல்லாமல் வீரர்கள் திணறியது குறிப்பிடத்தக்கது. இந்த இடங்களின் உரிமை […]

Read More

ரஷ்யாவில் கடலில் இறக்கப்பட்ட இந்திய கடற்படைக்கான புதிய ப்ரிகேட் ரக போர்க்கப்பல் !!

October 30, 2021

ரஷ்யாவின் யாந்தர் கப்பல் கட்டுமான தளத்தில் கட்டுப்பட்டு வரும் ஐ.என.எஸ் துஷில் ஃப்ரிகேட் ரக போர்க்கப்பல் முதல் முறையாக கடலில் இறக்கப்பட்டது. ப்ராஜெக்ட் பி1135.6 ரக கப்பல்களில் ஏழாவதான இதற்கு துஷில் என பெயரிடப்பட்டுள்ளது இதற்கு கேடயம் என தமிழில் பொருள்படும். இதற்கான விழாவில் ரஷ்யாவுக்கான இந்திய தூதர பால வெங்கடேஷ் வர்மா, மூத்த ரஷ்ய மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பி1135.6 ரக ஃப்ரிகேட் போர்க்கப்பல்களில் இரண்டு ரஷ்யாவிலும் […]

Read More

வெளி மாநிலத்தவரை கொல்லும் ஹைபிரிட் பயங்கரவாதி காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்டான் !!

October 30, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் அம்மாநில காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் ஹைபிரிட் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டு உள்ளான். மேலும் அவனது பெயர் ஜாவேத் அஹமது வானி எனவும் ஏதேனும் ஒரு கடைக்காரரை கொல்லும் நோக்கில் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இவன ஏற்கனவே இரண்டு வெளி மாநில சாலையோர வியாபாரிகளை கொன்ற குல்சார் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஒரு நிரம்பிய மேகஸின் மற்றும் ஒரு […]

Read More

மொரிஷியஸ் நாட்டிடம் மீண்டும் ரோந்து கலனை ஒப்படைத்த இந்தியா !!

October 30, 2021

கடந்த 2015ஆம் ஆண்டு மொரிஷியஸ் நாட்டு கடலோர காவல்படையில் சேவையில் இணைந்த பராக்குடா எனும் ரோந்து கலன் மேம்பாட்டு பணிகளுக்காக இந்தியா வந்தது. மேம்பாட்டு பணிகள் முடிந்ததும் மொரிஷியஸ் திரும்பிய அக்கப்பல் போர்ட் லூயிஸ் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் மீண்டும் அந்நாட்டு கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விழாவில் மொரிஷியஸ் அமைச்சர் ஆலன் கனூ மற்றும் அந்நாட்டிற்கான.இந்திய தூதர் திருமதி. நந்தினி சிங்க்லா மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மொரிஷியஸ் அமைச்சர் […]

Read More

உயிரியல் போர் முறைக்கு தயாராக வேண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் !!

October 30, 2021

பூனே சர்வதேச மையம் “பேரிடர் மற்றும் பெருந்தொற்று காலங்களில் தேசிய பாதுகாப்பு தயார்நிலை” எனும் தலைப்பில் நடத்திர கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கிருமிகளை துணிந்தே ஆயுதமாக மாற்றும் போக்கு கவலைக்குரியது எனவும் பயோ சேஃப்டி, பயோ டிஃபன்ஸ் மற்றும் பயோ செக்குயூரிட்டி ஆகிய திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். உயிரியியல் ஆராய்ச்சி அறிவியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாகும் ஆனால் அதனை தவறாக பயன்படுத்தி கொள்ளும் […]

Read More