Day: October 27, 2021

விரைவில் 3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ட்ரோன் ஒப்பந்தம் !!

October 27, 2021

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா விரைவில் 30 ப்ரடேட்டர் ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கான 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ப்ரடேட்டர் ட்ரோன்கள் தான் உலகின் முதலாவது ஆயுதம் தாங்கிய தொலைதூர அதிக உயரம் பறக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானங்கள் என்பதும் 950 குதிரைசக்தி திறன் கொண்ட இந்த ட்ரோன்கள் தனது எடையை விட 15 மடங்கு அதிகமான எடைகளை சுமந்து கொண்டு சுமார் 27 மணிநேரம் வரை தொடர்ந்து […]

Read More

காஷ்மீர் விவகாரம் ; பாகிஸ்தான் இடையே முதல் பிரச்சினை தென்படும் அறிகுறிகள் !!

October 27, 2021

காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி தனது நிலைப்பாட்டை தளர்த்தியதாக கருதும் பாகிஸ்தான் சற்றே கோபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையேயான உறவுகள் பலமடைந்ததும் ஆயுத வியாபாரம் வரை சென்றதும் ஒரு பக்கம் இருந்தாலும் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி தனது நிலைபாட்டை தளர்த்துவதை முற்றிலும் விரும்பவில்லை, ஆனால் துருக்கி தற்போது அமைதியாக காரணம் அதன் பொருளாதாரம் மோசமடைந்தது மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் காரணம் என கூறப்படுகிறது. […]

Read More

தேஜாஸ் தயாரிப்பு பணியில் ஈடுபட உள்ள தனியார் நிறுவனம் !!

October 27, 2021

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த தேஜாஸ் இலகுரக போர் விமானமானது தற்போது தயாரிப்பு கட்டத்தில் உள்ளது. தற்போது இந்த விமானத்தின் தயாரிப்பு திட்டத்தில் ஹைதராபாத் நகரை சேர்ந்த VEM TECHNOLOGIES நிறுவனமும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தேஜாஸ் போர் விமானத்தின் உடலின் மத்திய பாகத்தை மட்டும் மேற்குறிப்பிட்ட நிறுவனம் தயாரித்து கொடுக்க உள்ளது. இதற்காக சுமார் 1000 கோடி செலவில் 511 ஏக்கர் பரப்பளவில் தெலுங்கானா மாநிலத்தின் ஜரசங்கம் மாவட்டத்தின் யெல்கோய் பகுதியில் […]

Read More

இந்தியாவின் பொசைடான் விமானங்களை கண்டு சீனா ஏன் பயப்பட வேண்டும் ??

October 27, 2021

இந்தியா தற்போது 11 போயிங் பொசைடான்-8ஐ ரக தொலைதூர கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்களை இயக்கி வருகிறது, தற்போது 20க்கும் அதிகமான விமானங்களை இயக்கும் நோக்கில் மேலதிக விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த விமானங்கள் உலகின் மிகவும் அதிநவீனமான மற்றும் ஆபத்தான தொலைதூர கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் என பெயர் பெற்றவை ஆகும். இவற்றில் இருக்கும் மல்டி மோட் ரேடார் கப்பல்கள் நீர்மூழ்கிகள் வானூர்திகள் ஆகியவற்றை கண்டுபிடிக்கும், வயிற்று பகுதியில் […]

Read More

கடந்த 5 ஆண்டுகளில் 334% அதிகரித்த ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதி பாதுகாப்பு அமைச்சர் !!

October 27, 2021

மத்திய பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி சுமார் 334% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் பேசும் போது இந்தியா தற்போது சுமார் 75 நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்து வருவதாகவும் இது இந்திய பொருட்களின் தரத்திற்கு மிகச்சிறந்த சான்று எனவும், பாதுகாப்பு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு பங்களிக்கும் தூணாக அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். சைபர்வெளி, விண்வெளி, எதிர்கால தொழில்நுட்பங்கள், ஏரோஸ்பேஸ் போன்ற துறைகள் […]

Read More

இன்னாள் கடற்படை அதிகாரி மற்றும் முன்னாள் கடற்படை அதிகாரிகளின் தேச துரோக செயல்பாடு !!

October 27, 2021

இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இந்திய கடற்படையின் கிலோ ரக நீர்மூழ்கிகளின் மேம்படுத்தல் குறித்த ரகசிய ஆவணங்களை விற்றதற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களை கைது செய்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது மேலும் இந்திய கடற்படை இரண்டு மூத்த அதிகாரிகளை நியமித்து துறை ரீதியான விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More

பூஞ்ச் ஆபரேஷன் ஸ்லீப்பர் செல் பயங்கரவாதிகளின் பங்கு இருப்பதாக சந்தேகம் !!

October 27, 2021

16 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் பூஞ்ச் ஆபரேஷனில் ஸ்லீப்பர் செல் பயங்கரவாதிகளின் ஈடுபாடு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பல வருடங்களாக காஷ்மீரில் செயல்படாமல் முடங்கி கிடந்த ஸ்லீப்பர் செல் குழு தற்போது அமைதியை சீர்குலைக்க ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பூஞ்ச் ஆபரேஷன் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்டதும் கடினமானதுமான பயங்கரவாத ஒழிப்பு ஆபரேஷன் என பாதுகாப்பு படைகள் கூறுகின்றனர்.

Read More

சூடானில் ராணுவ ஆட்சி பிரதமர் அப்தல்லா ஹம்தோக் கைது !!

October 27, 2021

சூடான் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைபற்றி உள்ளது, மேலும் இடைக்கால அரசாங்கத்தை கலைத்து விட்டு அவசர நிலையை நாடு முழுக்க பிரகடனம் செய்துள்ளது. சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர், பிரதமர் கொண்டு செல்லப்பட்ட இடம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. நாடு முழுக்க வெடித்துள்ள போராட்டங்களை ஒடுக்க சூடான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்நாட்டு ராணுவ தளபதி […]

Read More