
சமீபத்தில் காஷ்மீரில் எல்லை கட்டுபாட்டில் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இவர்களில் ஒருவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் கொட்டராக்கரா பகுதியை சேர்ந்த சிப்பாய் வைஷாக், மெக்கனைஸ்ட் இன்ஃபான்ட்ரி ரெஜிமென்ட்டில் பணியாற்றி வந்தார்.
24 வயதே ஆன இவர் தனது எளிய குடும்ப பிண்ணியையும் பொருட்படுத்தாமல் நாட்டிற்கு சேவையாற்றும் எண்ணத்தில் உலகின் மிக மோசமான சண்டை நடைபெறும் பகுதிகளில் ஒன்றான காஷ்மீரில் பணியை கேட்டு பெற்றுள்ளார்.
தந்தையை இழந்த வைஷாக் தான் அக்குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்தார். தாய், தம்பி மற்றும் தங்கை ஆகியோரின் நம்பிக்கையாக இருந்த அவர் வீரமரணம் அடைந்த செய்தி கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனது ஊதியத்தில் வங்கி கடன் பெற்று சொந்தமாக வீடு கட்டி ஒரு இருசக்கர வாகனம் ஒரு சிறிய கார் வாங்கி தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை ஒற்றை ஆளாக உயர்த்த பாடுபட்ட நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.