Day: October 24, 2021

தரைப்படையை நவீனப்படுத்தும் வகையில் ஐ.பி.ஜி திட்டம் ஒரு பார்வை !!

October 24, 2021

இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் திட்டங்களின் வரிசையில் ஐ.பி.ஜி அதாவது ஒருங்கிணைந்த தாக்குதல் படையணிகள் (Integrated Battle Groups) மிக முக்கியமானது. தற்போது காலாட்படை கவசவாகன படை, பிரங்கி படை, டாங்கி படை ஆகியவை போர் களத்தில் தன்னந்தனியாக இயங்கி வருகின்றன. இனி எதிர்காலத்தில் இவைகள் ஒரே அணியாக செயல்படும் அதாவது ஒரு கோர் படைப்பிரிவில் 5-7 ஐ.பி.ஜிக்கள் இருக்கும். ஒவ்வொரு ஐ.பி.ஜி அணியிலும் 4-6 காலாட்படை பட்டாலியன்கள், 1 கவச வாகன பட்டாலியன், 1 டாங்கி ரெஜிமென்ட், […]

Read More

இந்தியாவின் சிக்கன் கழுத்து பகுதியை நெரிக்க பார்க்கும் சீனா, காரணம் என்ன ??

October 24, 2021

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 60 கிலோமீட்டர் நீளமும் வெறுமனே 20 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு குறுகிய பகுதிதான் சிலிகுரி காரிடார் பகுதி இதுதான் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் பகுதி ஆகும். இந்த குறுகிய பாதை அரசியல் ரீதியாக பொருளாதார ரீதியாக ராணுவ ரீதியாக புவிசார் அரசியல் ரீதியாக இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்றால் மிகையல்ல அதற்கான காரணங்களை இனி பார்க்கலாம். சிக்கன் நெக் அதாவது கோழி கழுத்து என […]

Read More

தோல்வி அடைந்த அமெரிக்க ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை !!

October 24, 2021

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் இருந்து வெளியாகும் தகவல்கள் அலாஸ்காவில் நடைபெற்ற ஒரு தொலைதூர ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்தததை உறுதி செய்கின்றன. இந்த சோதனை பற்றி அதிக தகவல்களை வெளியிடாமல் பென்டகன் ரகசியம் காத்து வருகிறது ஆனால் இந்த ஏவுகணையின் வடிவமைப்பானது அமெரிக்க தரைப்படையின் டார்க் ஈகிள் மற்றும் கடற்படையின் வழக்கமான உடனடி தாக்குதல் அமைப்பில் பயன்படுத்தபடலாம் என கூறப்படுகிறது. இந்த ஏவுகணையின் பூஸ்டர் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வி அடைந்ததாக […]

Read More

மலேசிய போர் விமான தேர்வில் வெளியேற்றப்பட்ட சீனா, போட்டியில் நிலைத்த தேஜாஸ் !!

October 24, 2021

மலேசியா தனது விமானப்படைக்கு போர் விமானங்களை வாங்குவதற்காக தேர்வுகளை நடத்தி வருகிறது இந்த போட்டியில் துருக்கி இத்தாலி சீனா தென்கொரியா ரஷ்யா இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. ஒன்பது போட்டியாளர்கள் தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டிய நிலையில் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே விமானங்களை அனுப்பியுள்ளனர். அந்த வகையில் சீனா பாகிஸ்தான் தயாரிப்பு ஜே.எஃப்-17, செக் நாட்டின் L-39NH மற்றும் அமெரிக்க டி7ஏ ஆகியவை தற்போது போட்டியில் இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது. மலேசியா முதல்கட்டமாக 18 […]

Read More

ஹைப்பர்சானிக் ஆயுத உருவாக்கத்தில் ஈடுபட்டு வரும் வெகுசில நாடுகளில் இந்தியாவும் அடக்கம் அமெரிக்க பாராளுமன்ற அறிக்கை !!

October 24, 2021

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்க பாராளுமன்ற அறிக்கையில் ஹைப்பர்சானிக் ஆயுதங்களை உருவாக்கி வரும் எலைட் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆய்வு குழு சமர்பித்த அறிக்கையில் ரஷ்யா சீனா அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னேற்றம் அடைந்த ஹைப்பர்சானிக் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா ஃபிரான்ஸ் ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் ஹைப்பர்சானிக் ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத்தில் களம் இறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் இதற்காக கைகோர்த்துள்ள […]

Read More