Day: October 23, 2021

பிரிட்டன் விமானந்தாங்கி கப்பலை பார்வையிட உள்ள இந்திய கடற்படை அதிகாரிகள் !!

October 23, 2021

இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமான குயின் எலிசபெத் விமானந்தாங்கி போர்கப்பலை இந்திய கடற்படையின் அட்மிரல்கள் பார்வையிட உள்ளனர். கூட்டு பயிற்சிக்காக இந்தியா வந்துள்ள இந்த பிரமாண்ட போர்க்கப்பலுக்கு இந்திய அதிகாரிகள் மும்பை கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பயணிக்க உள்ளனர். இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் தனது வலிமையை சீனாவுக்கு உணர்த்தும் வகையில் இங்கிலாந்து இந்த கப்பல் மற்றும் அதன் படையணியை நிலைநிறுத்தி உள்ளது. இந்தியா இந்த ரக விமானந்தாங்கி கப்பல்களின் டிசைனை தனது இரண்டாவது உள்நாட்டு விமானந்தாங்கி […]

Read More

உலகின் முதல் 25 ஆயுத ஏற்றுமதியாளர் பட்டியலில் இடம்பெற்ற இந்தியா !!

October 23, 2021

இந்தியா உலகின் முதல் 25 ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்று உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதனை பெங்களூருவில் நடைபெற்ற பாதுகாப்பு துறை நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் அவர் அறிவித்து இதனை ஒரு புதிய மைல்கல் என குறிப்பிட்டார். இந்த பட்டியலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை தளமாக கொண்டு இயங்கும் சிப்ரி எனும் புகழ்பெற்ற அமைப்பு வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது

Read More

தென்கொரியாவுடன் கே9 வஜ்ராவை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்தியா !!

October 23, 2021

இந்தியா தென் கொரியாவிடம் இருந்து கே9 வஜ்ரா தானியங்கி பிரங்கி அமைப்பை வாங்கியது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது இந்தியா தென் கொரியாவுடன் இணைந்து அந்த பிரங்கிகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கொரிய ஊடகமான யோன்ஹாப்பிடம் பேசிய இந்திய பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இரு நாட்டு அரசுகளும் தற்போது இதைபற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார். கே9 வஜ்ரா பிரங்கி […]

Read More

12ஆவது நாளை எட்டிய பூஞ்ச் ஆபரேஷன் கார்கில் போருக்கு பிறகான மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை 3000 வீரர்கள் பங்கேற்பு !!

October 23, 2021

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் செக்டாரில் 5 ராணுவ வீரர்களை கொன்ற பயங்கரவாத குழுவின் உறுப்பினர்கள் சிலர் ரஜோரி காடுகளில் பதுங்கினர். ஐந்து வீரர்களின் மரணத்திற்கு காரணமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட பிறகே ரஜோரி காடுகளில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் பற்றிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராணுவம் ஆபரேஷனுக்கு உத்தரவிட்டது, அதன்படி கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த ஆபரேஷன் இன்று 12ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த ஆபரேனில் 4 வீரர்கள் […]

Read More

மறைந்திருக்கும் எதிரி டாங்கியை அழிக்கும் திறனை காட்சிபடுத்திய இந்திய ராணுவம் !!

October 23, 2021

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவம் தவாங் செக்டாரில் சீன எல்லைக்கு மிக அருகே போர் பயிற்சி ஒன்றை நடத்தியது. அப்போது கடும் பனிமூட்டத்திற்கு இடையே மறைந்திருக்கும் எதிரி டாங்கியை இந்திய வீரர்கள் தொலைவில் இருந்து கண்காணித்து இலக்கை அடையாளம் கண்டு, பின்னர் பங்கர்களில் இருந்து வழிகாட்டப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை இலக்கை நோக்கி ஏவி வெற்றிகரமாக தாக்குதல் நடத்தினர்.

Read More

அமெரிக்காவுடன் 423 கோடி ரூபாய் மதிப்புள்ள டார்பிடோக்கள் வாங்க ஒப்பந்தம் !!

October 23, 2021

இந்தியா அமெரிக்கா உடன் சுமார் 423 கோடி ரூபாய் மதிப்பிலான மார்க்54 கனரக டார்பிடோக்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. டார்பிடோக்கள் மற்றும் சேஃப்களை இந்திய கடற்படை பயன்படுத்தி வரும் பி8ஐ தொலைதூர கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்களில் பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தான் உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பி8ஐ ரக விமானங்களை பயன்படுத்தி வரும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Read More