Day: October 21, 2021

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நடிகர் அஜித்; சில புகைப்படங்கள்

October 21, 2021

சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த நடிகர் அஜீத் இந்தியா பாக் எல்லையான வாகா சென்று அங்கு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை சந்தித்துள்ளார்..அவற்றில் சில புகைப்படங்களை காணலாம்..

Read More

வேகமெடுக்கும் ஆம்கா போர் விமான திட்டம் மேற்கத்திய விமானங்களில் இல்லாத புதிய தொழில்நுட்பம் இடம்பெற உள்ளது !!

October 21, 2021

சுதந்திர இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்று ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிப்பது ஆகும். அந்த வகையில் தற்போது படிப்படியாக ஆம்கா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது தற்போது அந்த திட்டம் வேகமெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி ஆம்கா விமானத்தில் மேற்கத்திய விமானங்களில் இல்லாத தொழில்நுட்பம் ஒன்று இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொழில்நுட்பம் ரஷ்யாவின் சுகோய்57 விமானத்தில் உள்ளதாகவும் இந்த தொழில்நுட்பத்தை இந்தியா தயாரிக்க ரஷ்யா உதவலாம் […]

Read More

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர் 1 ராணுவ வீரர் வீரமரணம் !!

October 21, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். மேலும் இந்த ஆபரேஷனில் 2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் அவர்களில் ஒருவன் ஆதில் வானி என்பதும், மூன்று நாட்களுக்கு முன்னர் புல்வாமா பகுதியில் தச்சு வேலை செய்து வந்த உத்தர பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரை சேர்ந்த வெளிமாநில தொழிலாளரை கொன்றவன் என்பதும் தெரிய வந்துள்ளது. வீரமரணம் அடைந்த வீரர் ராஜ்புத் ரெஜிமென்ட்டை சேர்ந்த சிப்பாய் கரன்வீர் […]

Read More

பஞ்சாப் எல்லையோரம் கைபற்றபட்ட ஆயுதங்கள் மற்றும் 1 கிலோ போதை பொருள் !!

October 21, 2021

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையோர பகுதியான தார் தரண் மாவட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் 1 கிலோ போதை பொருள் காவல்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படையால் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களில 22 கைதுப்பாக்கிகள், 44 மேகஸின்கள், 100 தோட்டாக்கள் மற்றும் 1 கிலோகிராம் ஹெராயின் ஆகியவை கைபற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை ஆகியவை நடத்தியுள்ளன. இது போல இந்த வருடம் ஜூன் மாதம் படாலா பகுதியில் […]

Read More

பூஞ்ச் என்கவுன்டர்: 2009க்கு பிறகு நடைபெறும் மிகப்பெரிய ராணுவ ஆபரேஷன் !!

October 21, 2021

தொடர்ந்து 10 நாட்களாக பூஞ்ச் செக்டாரில் உள்ள ரஜோரி காடுகளில் நடைபெற்று வரும் என்கவுன்டர் 2009க்கு பிறகு ராணுவத்தின் மிகப்பெரிய ஆபரேஷனாக தற்போது உள்ளது. சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதை பூஞ்ச் செக்டாரில் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெற்ற ஆபரேஷனில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மேலும் 1 இடைநிலை அதிகாரி உட்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தற்போது நடைபெற்று வரும் ஆபரேஷன் 10ஆவது நாளை […]

Read More

சீன எல்லையோரம் வானில் பயன்படுத்தக்கூடிய சென்சார்கள் மற்றும் சுய நுண்ணறிவு திறன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் இந்தியா !!

October 21, 2021

இந்திய ராணுவம் எல்லையோரம் சீன படைகள் மீதான கண்காணிப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருவதாகவும் கிழக்கு பிராந்திய தளபதி கூறியுள்ளார். மேலும் அவர் பேசும்போது சீன ராணுவம் எல்லையோரம் சற்றே படைகளை அதிகரித்துள்ளதாகவும் அவ்வப்போது போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறிய அவர், இந்திய ராணுவம் வான் சார்ந்த சென்சார்கள் மற்றும் சுய நுண்ணறிவு திறன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Read More

சீனாவை ஆத்திரமூட்டிய இந்திய ஊடகங்கள், திருடனுக்கு தேள் கொட்டியது போல தவித்த சீனா !!

October 21, 2021

இந்திய ஊடகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மோதலின் போது சீன வீரர்கள் வீழத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டன. இதனையடுத்து சீனா இந்திய ஊடகங்கள் ஆதாரமற்ற செய்திகளையும் வதந்திகளையும் பொய்களையும் பரப்புவதாக குற்றம்சாட்டிய சீனா அத்தகைய நிகழ்வு நடக்கவில்லை என மறுப்பு தெரிவித்தது. இதன் பிறகு தான் திருடனுக்கு தேள்கொட்டிய நிலையில் இருந்த சீனா கல்வானில் நடைபெற்ற நிகழ்வுகளின் ஒருதலைபட்சமான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

அர்ஜென்டினா தனது போர் விமான தேர்வில் இந்திய தேஜாஸூம் இருப்பதாக அறிவிப்பு !!

October 21, 2021

அர்ஜென்டினா விமானப்படை உலகின் மிக பலவீனமான விமானப்படைகளில் ஒன்றாக கருதப்படுகிறதுதற்போது அந்நாட்டு படையிடம் வெறுமனே 23 ஏ4 ஸ்கைஹாக் விமானங்கள் மட்டுமே உள்ளன. மிக நீண்ட காலமாகவே ஸ்பெயின், பிரேசில், சுவீடன், இஸ்ரேல், தென் கொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து போர் விமானங்கள் வாங்க முயற்சித்த போது இங்கிலாந்து அமெரிக்கா மூலமாக அழுத்தம் கொடுத்து முட்டுக்கட்டை போட்டது. ஆகவே தற்போது எப்படியேனும் போர் விமானங்களை அர்ஜென்டினா வாங்க துடித்து வருகிறது இதற்காக அந்நாட்டு அரசு சுமார் 664 […]

Read More

100 பல்குழல் ராக்கெட் லாஞ்சர்களை இந்திய எல்லையோரம் குவித்துள்ள சீனா !!

October 21, 2021

சீனா இந்தியா உடனான எல்லை பகுதியில் சுமார் 100 பல்குழல் ராக்கெட் ஏவும் அமைப்புகளை நிலை நிறுத்தி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சீனா தற்போது எல்லையோரம் நிலை நிறுத்தி உள்ள இந்த பல்குழல் ராக்கெட் ஏவும் அமைப்புகள் தொலைதூர தாக்குதலுக்கு ஏற்றவை எனவும் கூறப்படுகிறது. இந்திய ராணுவமும் சீன எல்லையோரம் தனது பங்குக்கு கே9 வஜ்ரா தானியங்கி பிரங்கிகள், 3 ரெஜிமென்ட் எம்777 பிரங்கிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட எல்70 ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கிகளை நிலைநிறுத்தி […]

Read More

இந்திய விமானப்படையின் மிராஜ்2000 மத்திய பிரதேசத்தில் விமானம் விபத்து !!

October 21, 2021

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ்2000 ரக போர் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. போர் விமானத்தை இயக்கிய விமானி கடைசி நேரத்தில் எஜெக்ஷன் இருக்கை மூலம் வெளியேறி உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கிய மிராஜ்2000 ரக போர் விமானம் குவாலியர் நகரில் அமைந்துள்ள மகராஜ்புரா விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் நிலையில் இந்திய விமானப்படை விசாரணைக்கு […]

Read More