
ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற 9 வெவ்வேறு என்கவுன்டர்களில் சுமார் 13 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு உள்ளதாகவும், ஶ்ரீநகரை சேர்ந்த 5 பயங்கரவாதிகளில் மூவர் வீழ்த்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டு ராணுவம் துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரால் பல இடங்களில் பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு உள்ளனர்.
மேலும் சண்டைகளின் போது பயங்கரவாதிகளுக்கு சரணடைவதற்கான வாய்ப்புகளை அளித்தும் அவர்கள் தொடர்ந்து சண்டையிட முடிவு செய்ததால் அவர்களை வீழ்த்த வேண்டியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.