Day: October 13, 2021

24 மணி நேரத்தில் ஏழு பயங்கரவாதிகளை வீழ்த்திய பாதுகாப்பு படைகள்

October 13, 2021

கடந்த 24 மணி நேரத்தில் காஷ்மீரின் ஐந்து முக்கிய இடங்களில் நடைபெற்ற என்கௌன்டர்களில் ஏழு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படைகள் வீழ்த்தியுள்ளன. பூஞ்ச்- ராஜோரி மாவட்ட எல்லையில் நடைபெற்ற சண்டையில் நமது வீரர்கள் ஐந்து பேர் வீரமரணம் அடைந்தனர். தெற்கு காஷ்மீரின் சோபியானில் இரு இடங்களில் நடைபெற்ற என்கௌன்டர்களில் ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.அதே போல அனந்தநாக்கிலும் பந்திபோரா பகுதியிலும் நடைபெற்ற இரு என்கௌன்டர்களில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களில் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த […]

Read More

14 வருடமாக தில்லியில் வசித்த பாக் ஸ்லீப்பர் செல் நிஜ துப்பாக்கி கதை !!

October 13, 2021

பாகிஸ்தானை சேர்ந்த மொஹம்மது அஷ்ரஃப் கடந்த 14 ஆண்டுகளாக அலி அஹமது நூரி என்ற பெயரில் பீர் மவுலானா என்ற அடைமொழியுடன் தலைநகர் தில்லியின் லஷ்மி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளான். இதை பற்றி பேசி துணை கமிஷனர் குஷ்வாஹா, அஷ்ரப் இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் ஸ்லீப்பர் செல் குழுக்களின் தலைவனாக இயங்கி வருவதாகவும் ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத செயல்களில் இவனுக்கு தொடர்பு உள்ளதாகவும் சந்தேகம் உள்ளதாக […]

Read More

இந்திய கடற்படை தலைமை தளபதி மற்றும் மூத்த அமெரிக்க கடற்படை அதிகாரி இடையே முக்கிய பேச்சுவார்த்தை !!

October 13, 2021

இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் மூத்த அமெரிக்க கடற்படை தளபதிகளில் ஒருவரான அட்மிரல் மைக்கேல் கில்டே ஆகியோர் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருதரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய அளவிலான பாதுகாப்பு ஆகியவற்றை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது சீனாவின் அடாவடி அதிகரித்துள்ள நேரத்தில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. ஐந்து நாள் சுற்றுபயணமாக இந்தியா வந்துள்ள அட்மிரல் மைக்கேல் கில்டே அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகள் பிரிவின் […]

Read More

இந்தியாவுக்கு சைபர் பாதுகாப்பு வசதிகளை தர ஆர்வம் காட்டும் உலகளாவிய முன்னனி நிறுவனம் !!

October 13, 2021

ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த தேல்ஸ் நிறுவனமானது உலகளவில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு துறை நிறுவனமாகும் இது பல்வேறு வகையான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது. தற்போது அந்த நிறுவனம் இந்தியாவின் ராணுவத்திற்கு சைபர் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளை தர ஆர்வம் காட்டி வருகிறது இதை அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி பேட்ரீஸ் கேய்ன் உறுதிப்படுத்தி உள்ளார். இந்திய தரைப்படை இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை மிக நீண்ட காலமாக வருங்கால தொழில்நுட்பங்களை பெற தீவிர முனைப்பு […]

Read More

மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்டுகளை தயாரிக்க இஸ்ரோ திட்டம் !!

October 13, 2021

நமது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ உலகின் முன்னனி விண்வெளி ஆய்வு அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அப்படி இருந்தும் இஸ்ரோ இன்னும் சில தொழில்நுட்பங்களில் கால்பதிக்கவில்லை அவற்றில் ஒன்று தான் தற்போது உலகம் முழுவதும் அதிகமாக தாக்கம் ஏற்படுத்தியுள்ள மீண்டும் பயன்படுத்தி கொள்ளக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பம். இந்த வகை தொழில்நுட்பத்தில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க்கின் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிபுணத்துவம் வாயந்ததாக விளங்கி வருகிறது என்பது […]

Read More

இந்தியா சீனாவுடனான போரில் தோற்கும் சீன அரசு ஆதரவு ஊடகம் !!

October 13, 2021

இந்தியா சீனாவுடன் போரை ஆரம்பித்தால் நிச்சயமாக தோல்வியை தழுவும் என சீன அரசுடைய ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியா தனது விருப்பத்தின் அடிப்படையில் எல்லை பிரச்சினையை ஒரு போதும் தீர்த்து கொள்ள முடியாது எனவும் இந்தியா மற்றும் சீனா ஆகியவை இருபெரும் சக்திகள் அவற்றால் எல்லையில் நீண்ட நாள் படைகளை குவித்து செயல்பட முடியும் ஆனால் இந்தியா சீனாவுடன் எல்லை பிரச்சினை காரணமாக போர் ஒன்றை ஆரம்பித்தால் அது தோல்வியை தழுவும் […]

Read More

7 நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட ஆயுத தொழிற்சாலை வாரியம் வரிசையாக 65,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் !!

October 13, 2021

300 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தை சீர்படுத்தும் நோக்கில் 7 புதிய நிறுவனங்களாக பிரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வருகிற 15 ஆம் தேதி முதல் இந்த 7 புதிய நிறுவனங்கள் செயல்பட துவங்க உள்ள நிலையில் அவற்றிற்கு முப்படைகள் மற்றும் துணை ராணுவம் ஆகியவற்றின் 65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வரிசை கட்டி உள்ளன. அக்டோபர் 15ஆம் தேதி முதலாக ஏழு நிறுவனங்களும் தங்களது செயல்பாட்டை துவங்க உள்ளன அவற்றிற்கு […]

Read More