Day: October 11, 2021

BREAKING ஜம்மு காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் !!

October 11, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஊடுருவ முயன்ற சில பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்ட படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால் இதை எதிர்பார்த்து பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர் நடத்திய தாக்குதலில் 1 இடைநிலை அதிகாரி மற்றும் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ராணுவத்தினர் மிகப்பெரிய அளவில் பயங்கரவாதிகளை தேடும் ஆபரேஷனை துவங்கி உள்ளனர்.

Read More

அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ரகசியங்களை விற்க முயன்ற அதிகாரி மனைவி கைது சீனாவுக்கு தொடர்பா ?

October 11, 2021

அமெரிக்க கடற்படையில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களின் ரகசியங்களை வெளிநாடு ஒன்றிற்கு விற்க முயன்றதாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. தற்போதைய கேள்வி மேற்குறிப்பிட்ட மூன்றாவது நாடு எது என்பதே பலரும் சீனாவை நோக்கி கைநீட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அதிகார சமநிலை நமக்கு எதிராக உள்ளது முன்னாள் வெளியுறவு செயலர் ஷிவ்ஷங்கர் மேனன் !!

October 11, 2021

இந்தியா டூடே கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் ஷிவ்ஷங்கர் மேனன் சில முக்கிய கருத்துக்களை முன்வைத்தார். அதாவது ஆசியாவில் அதிகார சமநிலை பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு எதிராக திரும்பி உள்ளதாகவும் அது சீனா பக்கம் சாய்ந்து நிற்பதாகவும் அவர் கூறினார். 1980களில் இரண்டு நாடுகளும் ஒரே அளவீடுகளை கொண்டிருந்தன பின்னர் சீனாவின் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சி அதன் திறன்களை பன்மடங்கு அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால் பின்தங்கிய நாம் தற்போது அதன் […]

Read More

காஷ்மீரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ஐ.எஸ்.ஐ !!

October 11, 2021

சமீபத்தில் வெளியாகி உள்ள ரகசிய தகவல்களின்படி பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ பயங்கரவாத குழுக்களுக்கு காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது அம்பலமாகி உள்ளது. அதாவது வழக்கமான பெயர் பெற்ற பயங்கரவாதிகள் அல்லாமல் முன் பின் தெரியாத இளைஞர்களை பயன்படுத்தி கொள்கின்றனர். அந்த இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களின் உதவியாளர்களிடம் ஆயுதம் பெற்று கொண்டு கொலை செய்து விட்டு மீண்டும் மற்றொரு நபரிடம் ஆயுதத்தை ஒப்படைத்து விட்டு மக்களுடன் கலந்து விடுகின்றனர். ஆகவே இவர்களை அடையாளம் காண்பது […]

Read More

நீர்மூழ்கி தயாரிப்பில் மீண்டும் வரலாற்று பிழை இழைக்குமா இந்தியா ??

October 11, 2021

இந்தியா ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து தொழில்நுட்ப உரிமைகளை பரிமாற்றம் அடிப்படையில் பெற்று கொண்டு கல்வாரி ரக நீர்மூழ்கிகளை தயாரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த தொழில்நுட்ப பரிமாற்றதிற்காக இந்தியா மிகப்பெரிய அளவில் பணத்தை கொடுத்து உள்ளது ஆகவே அந்த டிசைனை முழுவதுமாக பயன்படுத்தி கொள்ளாமல் பிழை செய்துள்ளது. கடந்த காலத்திலும் ஜெர்மனியிடம் இருந்து இதே முறையில் உரிமை பெற்று கட்டப்பட்ட டைப்209 நீர்மூழ்கிகளின் டிசைனை முழுவதுமாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இந்த தொழில்நுட்ப பரிமாற்றமானது அடிப்படையான […]

Read More

அக்டோபர் 10-13 மூன்று நாடுகளுக்கு வெளியறவு அமைச்சர் சுற்றுபயணம் !!

October 11, 2021

இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அக்டோபர் 10 முதல் 13 வரையிலான காலகட்டத்தில் மூன்று நாடுகளுக்கு சுற்றுபயணமாக செல்ல உள்ளார். கிர்கிஸ்தான் கஜகஸ்தான் மற்றும் அர்மீனியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் அவர் அந்நாட்டு தலைவர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்து பேச உள்ளார். இந்த சுற்றுபயணத்தின் போது இருதரப்பு உறவுகள் மட்டுமின்றி ஆஃப்கானிஸ்தான் பற்றியும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

இரண்டாம் கட்ட மலபார் போர் பயிற்சிகள் விரைவில் துவக்கம் !!

October 11, 2021

நான்கு க்வாட் நாடுகளின் கடற்படைகளும் பங்கு பெறும் மலபார் கடற்படை போர் பயிற்சிகளின் இரண்டாம் கட்டம் விரைவில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. வங்க கடலில் நடைபெற உள்ள இந்த இரண்டாம் கட்ட மலபார் பயிற்சியானது முதல் கட்ட பயிற்சிகள் நிறைவு பெற்ற ஆறு வாரத்திற்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வருடம் தான் முதல்முறையாக மலபார் பயிற்சிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது அதுவும் அரபிக்கடல் மற்றும் வங்க கடல் என இரு வேறு பகுதிளில் நடைபெற […]

Read More