Day: October 8, 2021

கூட்டு பயிற்சியில் எகிப்திய மிராஜ்2000 மற்றும் இந்திய மிராஜ்2000 !!

October 8, 2021

எகிப்தில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள “ஹாப் எக்ஸ் 2021” போர் பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கு பெற உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலில் நடைபெறும் ஃப்ளூ ஃப்ளாக் போர் பயிற்சியில் பங்கு பெற்ற கையோடு இந்திய விமானப்படை எகிப்து செல்ல உள்ளது. பின்னர் அங்கு நமது மிராஜ்2000 விமானங்கள் எகிப்திய மிராஜ் 2000 விமானங்களுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபடும் என கூறப்படுகிறது.

Read More

தென்சீன கடலில் கடலுக்கு அடியே விபத்தில் சிக்கிய அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் !!

October 8, 2021

இன்று காலை வெளிவந்த சில அமெரிக்க கடற்படை வட்டார தகவல்களின்படி தென்சீன கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த நீர்மூழ்கி கப்பல் விபத்தை சந்தித்து உள்ளது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ். கனெக்டிக்கட் (USS CONNECTICUT SSN-22) எனும் சீ வூல்ஃப் ரக அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியே மர்ம பொருள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 2 வீரர்கள் காயமடைந்து உள்ளதாகவும் கப்பலுக்கு பெரிய சேதம் ஏதுமில்லை எனவும் தற்போது குவாம் கடற்படை தளத்திற்கு […]

Read More

ட்ரம்ப் ஆட்சிகாலத்தில் அதிகரித்த அமெரிக்க அணு ஆயுதங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்கள் !!

October 8, 2021

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த காலகட்டத்தில் அமெரிக்கா தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ள தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு மிக குறைந்த திறன் கொண்ட WS762 ரக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 20 என்ற அளவில் அதிகரித்து உள்ளது, பின்னர் 2020ஆம் ஆண்டு மீண்டும் குறைந்துள்ளது. ஆனால் இந்த உயர்வுக்கான காரணம் என்ன என்பது குறித்த எவ்வித விளக்கமும் பொது வெளியில் இல்லை மேலும் W762 அணு […]

Read More

காஷ்மீரில் காவல்சாவடியை நோக்கி விரைந்த வாகனம் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு !!

October 8, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தனாக் மாவட்டத்தில் மோங்கால் பாலத்தில் மத்திய ரிசர்வ் காவல்படை சோதனை சாவடி உள்ளது. இன்று காலை பதிவெண் இல்லாத ஸ்கார்பியோ வாகனம் ஒன்று காவல்சாவடியை நோக்கி வேகமாக அத்துமீறி வந்த நிலையில் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் வாகனத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் வாகன ஓட்டி தப்பித்து சென்றுள்ளான், இறந்தவனின் அடையாளம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read More

திருப்பூர் அமராவதி ராணுவ பள்ளியில் முதன்முறையாக மாணவிகள் சேர்ப்பு

October 8, 2021

திருப்பூர் மாவட்டம் அமராவதிநகர் ராணுவ பள்ளி பல ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு அகாடமிக்கு மாணவர்களை அனுப்பி வரும் பணியை செய்து வருகிறது. இந்த பள்ளியில் பயின்ற பல தமிழக மாணவர்கள் முப்படைகளில் உயர் பதவிகளில் உள்ளனர். அந்த வகையில் முன்னாள் தரைப்படை துணை தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அன்பு, முன்னாள் கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் ஆகியோர் இங்கு பயின்றோர் ஆவர். தற்போது முதல்முறையாக இந்த பள்ளியில் மாணவிகள் 6ஆம் வகுப்பில் […]

Read More

இஸ்ரேலில் பன்னாட்டு பயிற்சியில் பங்கு பெறும் இந்திய விமானப்படை !!

October 8, 2021

இஸ்ரேலில் விரைவில் நடைபெற உள்ள “ஃப்ளூ ஃபளாக்” பன்னாட்டு கூட்டு பயிற்சிகளில் இந்திய விமானப்படையும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஃபிரான்ஸ் மற்றும் கீரீஸ் ஆகிய நாடுகளும் பங்கேற்க உள்ளன. இந்தியா சார்பில் இந்த கூட்டு பயிற்சியில் நமது மிராஜ்-2000 விமானங்கள் பங்குபெற உள்ளதாக விமானப்படை தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பங்கு பெறும் கீரிஸ் நாட்டு விமானப்படையும் மிராஜ்2000 விமானங்களை அனுப்பி வைக்க உள்ளது […]

Read More