Day: October 4, 2021

கடற்படைக்கான டெட்பஃப் போர் விமான தேவைகள் இறுதி செய்யப்பட்டது !!

October 4, 2021

விமான மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய கடற்படை இணைந்து புதிய கடற்படை போர் விமானமான டெட்பஃப்பின் தேவைகளை இறுதி செய்துள்ளன. இந்த தேவைகள் தான் விமானத்தின் டிசைனை வடிவமைப்பதில் மிக மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு பல்வேறு சோதனைகளை அடுத்து டிசைன் இறுதி செய்யப்படும். 26 டன்கள் எடை மற்றும் இரட்டை என்ஜின் கொண்ட இந்த புதிய கடற்படை போர் விமானமானது 2025ஆம் ஆண்டு முதன்முறையாக வெளிவரும் என கூறப்படுகிறது.

Read More

மேலதிக கே9 வஜ்ரா பீரங்கிகளை வாங்க விரும்பும் இந்திய தரைப்படை !!

October 4, 2021

தென் கொரியாவின் கே9 பேந்தர் வகை அதிநவீன தானியங்கி பீரங்கிகளை இந்திய ராணுவம் கே9 வஜ்ரா என்ற பெயரில் இந்தியாவில் தயாரித்து பயன்படுத்தி வருகிறது. சுமார் இத்தகைய 100 பீரங்கிகளை ஏற்கனவே படையில் இணைத்த நிலையில் இவற்றை தற்போது லடாக்கிலும் களமிறக்கி உள்ளது. இவற்றின் செயல்பாட்டில் திருப்தியடைந்த தரைப்படை தற்போது மேலதிக கே9 வஜ்ராக்களை வாங்க விரும்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மலையக பகுதிகளுக்காக வேண்டி 40 கே9 வஜ்ரா தானியங்கி பீரங்கிகளை பெற்று பயன்படுத்தி […]

Read More

அல்ஜீரியா மற்றும் ஃபிரான்ஸ் உடையே மோதல் போக்கு !!

October 4, 2021

சமீபத்தில் ஃபிரெஞ்சு அதிபர் அல்ஜீரியா நாட்டை பற்றி பேசுகையில் அந்நாட்டு அதிபர் மிகவும் கடினமான சூழலில் சிக்கி உள்ளதாகவும், ஹிராக் எனப்படும் ராணுவ அரசியல் முறையால் அல்ஜீரியா ஆட்சி செய்யப்படுவதாகவும் கருத்து தெரிவித்தார். இதனையடுத்து அல்ஜீரியா ஃபிரான்ஸ் இடையிலான உறவுகள் மோசமடைந்து உள்ளன தங்களது தூதரை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. மேலும் ஃபிரெஞ்சு நாட்டை சேர்ந்த விமானங்கள் அல்ஜீரியாவின் வான்பரப்பில் பறக்கவும் தடை விதித்துள்ளது.

Read More

நடுக்கடலில் தவித்த மூன்று இந்தியர்களை மீட்ட ஃபிரெஞ்சு கடற்படை !!

October 4, 2021

அரபிக்கடல் பகுதியில் எம்.வி. காட்வின் ஐலன்ட் எனும் வர்த்தக கப்பல் பயணிக்கையில் ஏதோ காரணத்தால் அக்கப்பலில் பணியாற்றி வந்த மூன்று இந்திய மாலுமிகள் தவிக்க கப்பல் குழு உதவி கோரியது. இதனையடுத்து அப்பகுதியில் கடல் கொள்ளை ஒழிப்பு பணியில் ஐரோப்பிய படைகள் சார்பில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த ஃபிரெஞ்சு கடற்படை கப்பலான எஃப்.எஸ். லாங்க்யூடாக் மீட்பு பணியில் இறங்கியது. அந்த போர்க்கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் உடனடியாக விரைந்து சென்று மூன்று இந்திய மாலுமிகளையும் மீட்டு ஒமன் நாட்டின் சலாலா […]

Read More

எல்லை கட்டுபாட்டு கோடு அருகே 25 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைபற்றப்பற்றிய ராணுவம் !!

October 4, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊரி செக்டாரில் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே இந்திய தரைப்படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எல்லை கட்டுபாட்டு கோட்டுக்கு அப்பால் இருந்து ஊடுருவ முயன்ற சிலரின் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகளை கண்டு அப்பகுதிக்கு விரைந்தனர். அவர்கள் தங்களை நோக்கி வரும் ராணுவத்தினரை கண்டதும் தங்களிடம் இருந்த பைகளை விட்டுவிட்டு தப்பி ஒடினர். அவற்றை கைபற்றிய ராணுவத்தினர் சுமார் 25 கிலோ எடையிலான கள்ள சந்தையில் 30 கோடி அளவு பெறுமானம் […]

Read More

தஜிகிஸ்தான் எல்லையில் தற்கொலைப்படையினரை குவிக்கும் தாலிபான்கள் !!

October 4, 2021

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் எல்லைகளில் தற்கொலைப்படை பயங்கரவாதிகளை நிலைநிறுத்த வேண்டி ஒரு புதிய படையணியை தாலிபான்கள் உருவாக்கி உள்ளனர், இதன் பெயர் லஷ்கர் இ மன்சூரி ஆகும். இவர்கள் தஜிகிஸ்தான் நாட்டுடன் எல்லையை பகிரும் படாக்ஷன் மாகாணத்தில் அதிக அளவில் குவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாலிபான்கள் இந்த படையணியை பெரிதும் மதிக்கின்றனர், அமெரிக்க மற்றும் ஆஃப்கன் படைகளின் வீழ்ச்சி இந்த தற்கொலை படை வீரர்கள் இன்றி சாத்தியமில்லை எனவும், இந்த வீரர்கள் எதற்கும் அஞ்சாமல் வெடிகுண்டுகளை சுமந்து […]

Read More