Day: October 2, 2021

புதிய இஸ்ரேலிய ட்ரோன்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன ?? ஒரு பார்வை !!

October 2, 2021

இந்தியா இஸ்ரேலுடன் கடந்த ஜனவரி மாதம் நான்கு ஹெரோன் ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் உலகளாவிய பெருந்தொற்று காரணமாக அவற்றின் டெலிவரி தொடர்ந்து தள்ளிபோய் கொண்டே இருந்தது. தற்போது மீண்டும் இவற்றின் டெலிவரிக்கான பணிகள் துவங்கி உள்ளன டிசம்பர் மாதத்திற்கு முன் அனைத்து ட்ரோன்களும் டெலிவரி ஆகும் என தெரிகிறது. இவை நீண்ட தூரம் பறக்கவும், சுமார் 35,000 அடி உயரம் வரை செல்லும் திறன்களையும் கொண்டவை ஆகும். இவற்றின தொலைதூர் ரேடார்கள் மற்றும் […]

Read More

கலைக்கப்பட்ட ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் நல்லதா கெட்டதா ??

October 2, 2021

மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தை கலைக்கும் திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் 200 வருட பழைமமிக்க நிறுவனத்தின் 70,000 பணியாளர்கள் ஏழு குழுமங்களின் கீழ் பணியமர்த்தப்படுவர். ஆனால் இந்த ஏழு குழுமங்களும் மத்திய அரசின் இயங்கும் என கூறப்படுகிறது, அவையாவன NIML, AVNL, AWEIL,TCL, YIL, IOL மற்றும் GIL. அனைத்து ஆயுத தொழிற்சாலை வாரிய பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக இந்த ஏழு நிறுவனங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர் இதற்கான உத்தரவு செப்டம்பர் 24 அன்று […]

Read More

தொடர்ந்து வீரர்கள் மற்றும் தளவாடங்களை எல்லையில் குவிக்கும் சீனா !!

October 2, 2021

இந்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி சமீபத்தில் சீனா தொடர்ந்து எல்லையோரம் அதிக அளவில் வீரர்கள் மற்றும் தளவாடங்களை குவித்து வருவதாக விமர்சித்தார். இந்தியாவும் இதற்கு பதிலடியாக படைகளை நகர்த்தி வரும் பட்சத்தில் கூட சீனா பொறுப்பாக செயல்பட்டு எல்லையோரம் அமைதி திரும்ப உதவும் என நம்புவதாக குறிப்பிட்டார். மேலும் பேசும் போது இந்தியா கிழக்கு லடாக்கில் சீனாவின் ஒருதலைபட்சமான செயல்பாடுகளை ஒரு நாளும் ஏற்று கொள்ள போவதில்லை என தெரிவித்தார்.

Read More

காஷ்மீரில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

October 2, 2021

கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக தற்போது காஷ்மீரில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெளிநாட்டு பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் லஷ்கர் இ தாய்பா மற்றும் ஜெய்ஷ இ மொஹம்மது பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தோர் ஆவர். ஆஃப்கானிஸ்தானில் ஹக்கானி குழுவினருடன் இணைந்து சண்டையிட்ட இவர்கள் வடக்கு காஷ்மீர் பகுதியில் ஊடுருவி வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜூலை முதல் இதுவரை பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் ஆஃப்கன் எல்லையோர பழங்குடியினரை சேர்ந்த 50 […]

Read More

புதிய சப்சானிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை பற்றிய அறிவிப்பு வெளியிட்ட இந்தியா !!

October 2, 2021

இந்தியா வங்க கடல் பகுதியில் விரைவில் நடத்த உள்ள சப்சானிக் க்ருஸ் ஏவுகணை சோதனைக்கான நோட்டாம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஆனால் இந்த சோதனையில் சோதிக்கப்பட வேண்டிய ஏவுகணை பற்றிய எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை ஆகவே சில கருத்துக்கள் உலா வருகின்றன. அதன்படி டர்போ ஃபேன் என்ஜின் பொருத்தப்பட்ட நிர்பய் சப்சானிக் க்ரூஸ் ஏவுகணையாக இருக்கலாம் எனவும் இந்த ஏவுகணை இதுவரை சோதிக்கப்படாத ITCM ஏவுகணை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ITCM ரக ஏவுகணையானது மாக் […]

Read More

சீனாவின் புதிய தொலைதூர லாயல் விங்மேன் ரக ஆளில்லா விமானம் !!

October 2, 2021

சீனாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி சூகாய் நகரத்தில் நடைபெற்று வருகிறது அங்கு தனது பல்வேறு தளவாடங்களையும் காட்சிபடுத்தி உள்ளது. அங்கு சீனா தனது புதிய FH-97 ரக தொலைதூர ஆளில்லா விமானத்தை காட்சிபடுத்தி உள்ளது இதனை சீன ஏரோஸ்பேஸ் அறிவியல் தொழில்நுட்ப குழுமம் வடிவமைத்து தயாரித்து உள்ளது. இந்த ஆளில்லா விமானமானது லாயல் விங்மேன் ரகத்தை சேர்ந்தது ஆகும், தற்போது அமெரிக்கா ரஷ்யா இந்தியா பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளன. […]

Read More

இந்திய ஆஸ்திரேலிய கடற்படைகள் இடையே ஒப்பந்தம் !!

October 2, 2021

கடந்த புதன்கிழமை அன்று இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகள் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். இந்த ஒப்பந்தம் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தின் அமைதி பாதுகாப்பு ஸ்திரத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றை சார்ந்த இருதரப்பு பங்களிப்பை மேலும் மேலும் வலுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் மூலமாக இருதரப்புக்கும் இடையேயான வெளிப்படைத்தன்மை புரிதல் நம்பிக்கை நல்லெண்ணம் ஆகியவை மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கடற்படை தனது வரலாற்றில் முதல் முறையாக இப்போது […]

Read More